Published:Updated:

மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்தார் மோடி? #Video

சு.நந்தினி
மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்தார் மோடி? #Video
மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்தார் மோடி? #Video

பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்தியாவில், பொருளாதாரரீதியாக எந்த ஒரு முன்னேற்றமும் வரவில்லை. ஆட்சிக்கு வந்த நாள்முதல் அவர், '' 'டிஜிட்டல் இந்தியா', 'தூய்மை இந்தியா' '' எனப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், பிரதமரான தேதிமுதல் அவர் இந்தியாவில் இருந்த நாள்களைவிட வெளிநாடுகளில் இருந்த நாள்கள்தான் அதிகம். மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்ததற்குப் பதிலாக இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்திருந்தால், அவர் சொன்ன 'டிஜிட்டல் இந்தியாவும்', 'தூய்மை இந்தியாவும்' சாத்திமாகியிருக்கும். இந்திய மக்களின் பிரச்னைகள் என்னவென்று தெரிந்துகொள்ள அவர் முயற்சி செய்திருந்தால், மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு நிச்சயம் புரிந்திருக்கும். மக்களுக்கு ஏதேனும் பெரிய பிரச்னை இருக்கும் நிலையில்தான், '500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது' எனவும், 'மாட்டிறைச்சிக்குத் தடை போடுவதுமான போன்ற அறிவிப்புகளைக் கட்டவிழ்த்துவிடுவார். மக்கள் அவர் பிரச்னைகளை மறந்து, இதைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள். மூன்றாண்டுகளில் மோடி பெரிதாக ஒன்றும் செய்யாவிட்டாலும், மக்களுக்கு அவரைப் பிடிக்க, ஆதரிக்க பல காரணங்கள் இருக்கின்றன. அப்படி என்னதான் செய்தார் மோடி என்பதை தெரிந்துகொள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்...