Published:Updated:

'இது, கல்ச்சுரல் எமர்ஜென்சி' - இயக்குநர் கமல் காட்டம்

'இது, கல்ச்சுரல் எமர்ஜென்சி' - இயக்குநர் கமல் காட்டம்
'இது, கல்ச்சுரல் எமர்ஜென்சி' - இயக்குநர் கமல் காட்டம்
'இது, கல்ச்சுரல் எமர்ஜென்சி' - இயக்குநர் கமல் காட்டம்

கேரளாவில் நடைபெறவுள்ள உலக ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் சில ஆவணப்படங்களைத் திரையிட மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்கு கேரள சாலசித்ரா அகாடமியின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கமல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 உலக ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழா, கேரளாவில் நடைபெறவுள்ளது. இதை அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கேரள சாலசித்ரா அகாடமியின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கமல்  கூறுகையில், “ரோஹித் வெமுலா, ஜே.என்.யூ சர்ச்சை மற்றும் காஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்த ஆவணப்படங்களைத் திரையிட மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன அணிய வேண்டும், என்ன பேச வேண்டும், எதைப் பார்க்கவேண்டும் என்பதை அரசு அமைப்புகள்தான் முடிவு செய்கின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை அறிவிக்கப்படாத கலாசார எமர்ஜென்சியாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது” என்றார் ஆவேசத்துடன். 

இதற்குமுன் திரையரங்கில் தேசிய கீதம் ஒலிபரப்ப எதிர்ப்புத் தெரிவித்தும், கமலா தாஸின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராகவும் பேசியிருந்தார் கமல். அப்போது ராதாகிருஷ்ணன் என்கிற பா.ஜ.க தலைவர், ‘`கமலுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. தேசத்துக்கும் தேசிய கீதத்துக்கும் அவர் மதிப்பளிக்கவில்லை என்றால், நாட்டைவிட்டு வெளியேறலாம்'’ என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான கமல், கிட்டத்தட்ட 50 மலையாளப் படங்களுக்குமேல் இயக்கியுள்ளார். தவிர, பிரசாந்த், ஷாலினி நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்’ என்ற தமிழ்ப் படத்தையும், ஓர் இந்திப் படத்தையும் இயக்கியுள்ளார். மூன்று தேசிய விருதுகளையும் ஏழு மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.