Published:Updated:

’தீபா...அ.தி.மு.க.!’ மாதவன் பேட்டியெடுத்த நிருபரின் அனுபவம்

’தீபா...அ.தி.மு.க.!’ மாதவன் பேட்டியெடுத்த  நிருபரின் அனுபவம்
’தீபா...அ.தி.மு.க.!’ மாதவன் பேட்டியெடுத்த நிருபரின் அனுபவம்

போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவையின் நிர்வாகி ராஜா போன்றோர் கடந்த வாரம் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டனர். பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே தம்பி தீபக்குக்குச் சாபமிட்டார் தீபா. 

’தீபா...அ.தி.மு.க.!’ மாதவன் பேட்டியெடுத்த  நிருபரின் அனுபவம்

சென்னை பாஷையில் திட்டி  ``வீட்டுல இருந்த நகை எல்லாம் திருடிட்டுப் போனவன்தானே நீ" என மாதவனை, தீபா முன்னிலையிலேயே ஒருமையில் பேசினார் ராஜா. 

மாதவன், எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் நிறுவனர். 'ஒரு கட்சியின் தலைவரைப் பொது இடத்தில் வைத்துத் திட்டுகிறாரே... இவர்களுக்குள் என்னதான் பிரச்னை?' - மாதவனிடமே பேசி ஒரு பேட்டி எடுத்துவிடலாம் என முடிவுசெய்து போன் செய்தோம்.

நாம் யார் எனச் சொன்னதும், படபடவெனப் பேச ஆரம்பித்தார். 

``சார், நான் இந்த அ.தி.மு.க-வைக் கட்டிக்காக்கணும்னு நினைக்கிறேன். லட்சக்கணக்கான தொண்டர்கள் என்கூடதான் இருக்காங்க. நானும் தீபாவும் ஒற்றுமையாக இருந்துவிட்டால் இந்தக் கட்சியை முழுவதுமாகக் கைப்பற்றிவிடுவோம் என்ற பயத்தில்தான், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் திட்டம்போட்டு  தீபாவையும் என்னையும் பிரித்துவிட்டார்கள். இதுக்கெல்லாம் சீக்கிரமே ஒரு முடிவு வரும் சார்" என கூலாகப் பேசினார்.

``நீங்க நேர்ல வாங்க சார். எல்லாத்தையும் விரிவாகப் பேசி பேட்டியாகவே எடுத்துடுவோம்" என்றேன்.

``சார், புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் நிறுவிய கட்சி, கலைய விட மாட்டேன். பேட்டி எடுக்க எங்கே வரணும்?'' எனக் கேட்டவர், முதலில் அவரது அலுவலத்துக்கு வரச் சொன்னார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை ``நீங்களே இடத்தைச் சொல்லுங்க. காலையில 6 மணிக்கு வரச் சொன்னாலும் வந்துடுறேன்" என்றார். 

செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நாம் சொல்லும் முகவரிக்கு வரச் சொன்னோம். கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு 7:30 மணிக்கு அவரது காரில் வந்து இறங்கினார்.

என்னை அவரிடம் அறிமுகம் செய்தேன். என்னென்ன கேள்விகள் கேட்கப்போகிறேன் என்பதை அவரிடம் முன்கூட்டியே சொன்னேன். குறுக்கிட்ட மாதவன், ``சார்... நீங்க மனசுல எந்தத் தயக்கமும் வெச்சுக்காதீங்க. எந்தக் கேள்வி வேணும்னாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் ரெடி" என்றார். 

நான் விளையாட்டாக,  ``சார், நான் ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். பரவாயில்லையா?" என்றேன். சிரித்தார். பதில் எதுவும் சொல்லவில்லை. இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம் எனப் புரியவில்லை. பேட்டிக்குப் பிறகுதான் இந்தச் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது.

கேமராமேன், `ரோலிங்...' என்றதும் முதல் கேள்வியாக ``நீங்க யாரு சார்?" என்று கேட்டேன். சற்றும் எதிர்பார்க்காத பதில் வந்தது. தொடர்ந்து பல கேள்விகள் கேட்ட பிறகு ``சின்ன வயசுலேயே அரசியல்வாதியாகணும்னு முடிவுபண்ணிட்டீங்களா?" எனக் கேட்டேன். அதற்கும் சளைக்காமல் பதில் சொன்னார்.  எந்த அளவுக்கு இவர் கட்சியின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் தயக்கத்துடன் ``நீங்கதான் உங்க கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரா?" என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் `அட... அட... அட...'  

பேட்டியின் நடுவில் சின்ன பிரேக் இருந்தது. அப்போது, ``சார், நான் சொல்ற பதில் எல்லாம் சரியா இருக்கா? மீம்ஸ் போட்டுடப்போறாங்க. என் மனசுல பட்டதைச் சொல்றேன்" என்றார்.

 ``உங்களுக்கு என்ன தோணுதோ சொல்லுங்க சார்" என்று மீண்டும் பேட்டியை ஆரம்பித்தேன்.

இறுதியாக தீபா, சசிகலா, தீபக், ராஜா அந்த நகை மேட்டர் எல்லாம் முடித்துவிட்டு, ``ஜனாதிபதி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?" என விளையாட்டாக எழுதிவைத்த கேள்வியையும் ஃபைனல் பன்ச்சாக கேட்டேவிட்டேன். எதையோ யோசித்தார். நம்மைத் திட்டப்போகிறாரோ என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, அவர் சொன்ன பதில்..... 


மாதவன் பேட்டியை முழுவதும் பார்க்க...

அவர் சொன்ன மாதிரி மீம்ஸ் எதுவும் ரெடி பண்ணிடாதீங்க மக்களே!