Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

டைசியில் அந்தச் சங்கு ஊதப்பட்டுவிட்டது. இந்திய விவசாயத்தை நோக்கிய அபாயச் சங்கு!

மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட்டுள்ளார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி. இதுவரை இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை மட்டுமே வர்த்தகரீதியாகப் பயிரிட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையை மாற்றி, இப்போது மற்றப் பயிர்களுக்கும் இந்தச் சந்தையைத் திறந்துவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய வேளாண்மையின் மீது பெரும் தாக்கத்தை நிகழ்த்தவல்ல இந்த மரபணு மாற்ற விதைகளை 'ஏன் இந்தியா அனுமதிக்கிறது?’ என்பதற்கு, வீரப்ப மொய்லி சொல்லும் விளக்கம் விவகாரமானது. ''இந்தியாவின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பான மரபணு மாற்றப்பட்ட விதைளைப் பயன்படுத்துவது மட்டுமே தீர்வு'' என்கிறார் மொய்லி.

ஆனால், மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் தரும் புள்ளிவிவரம் வேறு மாதிரி உள்ளது. இந்திய உணவுத் தானிய உற்பத்தி 263 மில்லியன் டன் என்ற சாதனை அளவில் இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாக இது ஏறுமுகத்தில் இருப்பதாகவும் குறிப்பிடும் சரத்பவார், ''இந்திய விவசாயம் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மகிழ்ச்சியான விவசாயத் துறை அமைச்சர் நான்தான்'' என்கிறார். இந்த முரண் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன? லாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்ப்பது போல, ஏற்கெனவே பாரம்பரிய விவசாய முறையிலேயே நல்ல உற்பத்தித் திறனுடன் இருக்கும் விவசாயத்தை ஒட்டுமொத்தமாக மரபணு மாற்றத்தின் கையில் ஒப்படைக்கின்றனர்.

மரபணு மாற்ற விதைகளின் மூலம் விளையும் உணவுத் தானியங்கள் பெரும் நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என்று உலகெங்கும் உள்ள அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இதற்காக உலக வீதிகளில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, மரபணு மாற்றச் செடிகளில் விளையும் தானியத்தை, மறுபடியும் விதையாகப் பயன்படுத்த முடியாது. விதைகளுக்கு அந்த நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டும். இப்படி அமெரிக்காவை 'அண்டி’யிருக்க வேண்டிய நிலைக்கு நம்மை ஆளாக்குவதே இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம்.

1960-களில் பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயன உரங்களை இந்தியாவுக்குள் கொண்டுவந்த அமெரிக்கா, இப்போது மரபணு மாற்ற விதைகளின் மூலம் மற்றுமொரு வேளாண் தாக்குதலை நிகழ்த்துகிறது. அதைத் தடுத்து நிறுத்தவேண்டிய இந்திய அரசோ, பச்சைப் பொய்களைச் சொல்லி பட்டுக் கம்பளம் விரிக்கிறது. முதலில், அரசின் இந்த 'அடிமை’ மரபணுவை மாற்ற வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism