அ.தி.மு.க. ஆட்சி என்றாலே, 'சென்னையும் மன்னையும் ஒன்றுதான்’ என்று சொல்லும் அளவுக்கு மன்னார்குடி வகையறாக்களில் அதிகாரம் மிக்கவராக இருந்தவர் திவாகரன். வழக்கு, கைது, சிறைவாசம் என அ.தி.மு.க. ஆட்சியில் அவரையே பாடாய்படுத்தியதுதான் சசிகலா உறவுகளையே அதிரவைத்தது. இந்தக் களேபரங்களில் இருந்து விடுபட்ட திவாகரன், தனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். அதற்குத் தன்னுடைய பாசமான அக்கா சசிகலா வருவாரா என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. அந்த வருத்தத்துடன் அந்தத் திருமணம் நடந்து முடிந்துவிட்டது!

திவாகரனின் மகள் டாக்டர் ராஜ மாதங்கிக்கும், மதுரையைப் பூர்விகமாகக்கொண்ட டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனின் மகன் டாக்டர் விக்ரமுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 'திருமணத்தை நீங்களே நடத்துங்கள். நான் நிச்சயம் வந்து வாழ்த¢துகிறேன்’ என்று சசிகலா சொன்னாராம். அவர் வராமல் போகவே, 'இனிமேல் நம்முடைய குடும்ப உறவுகளின் நல்லது கெட்டது எதற்குமே வர மாட்டாரா?’ என்று குழப்பத்தில் உள்ளனர்.

மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக் கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணை வீட்டில்தான் திருமணம் நடந்தது. பிரமாண்டமாக அமைக்கப்பட்ட திருமண அரங்கத்துக்கு அண்ணன் வினோதகன்

பெயரை வைத்து குடும்பப் பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார் திவாகரன். திருமணத்துக்காக ஒரு ஃபிளெக்ஸ்கூட வைக்கக் கூடாது என்று திவாகரன் உத்தரவு போட்டிருந்தாராம். அ.தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்து அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். அழைப்பிதழ்கள் கொடுக்கவில்லை என்றாலும் கட்சியினர் சிலர் வந்திருந்தனர்.

மண்டபத்தின் 48 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. யார் யார் திருமணத்துக்கு வந்தனர், வரவில்லை என்பது குறித்து சர்ச்சை கிளம்பினால், அதனைத் தெளிவுப்படுத்தவே இந்த கேமரா பதிவுகளாம். அதுபோல, ஒவ்வொரு ஊர் ஆட்களையும் நன்கு தெரிந்த முக்கியஸ்தர்கள் 25 பேர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள், வந்திருந்த நபர்களின் பெயர்களை மறக்காமல் குறித்துக்கொண்டனர். இன்னொரு புறம், சென்னையில் இருந்து வந்திருந்த உளவுத் துறையினரும் தங்கள் பங்குக்குத் திருமணத்தில் கலந்துகொண்டோரின் விவரங்களை திருமண அரங்குக்கு வெளியில் நின்றவாறு குறிப்பெடுத்துக்கொண்டனர்.

சசிகலா குடும்ப உறுப்பினர்களான மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ், பாஸ்கரன், கலியபெருமாள், இளவரசி போன்றவர்களைத் தாண்டி... வேதாரண்யம் பி.வி.ராஜேந்திரன், ஜி.ஆர்.மூப்பனார், முன்னாள் அமைச்சர் அழகு த¤ருநாவுக்கரசு ஆகியோரும் வந்து வாழ்த்தினர். முதல்வரின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு மட்டும் அழைப்பு இல்லையாம். முதல்வரின் கோபப் பார்வைக்கு மீண்டும் ஆளாக வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கைதான் காரணம்.

மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம். ''திவாகரன் மீது சசிகலா ரொம்ப பாசமாக இருப்பார். அவர் காட்டிய பாசத்தால்தான், இந்த அளவுக்கு வளர்ந்தார். 'எனக்காக இல்லை என்றாலும் என் மகள் (மணமகள்) மேல் உள்ள பாசத்தால் வந்துவிடுவார்’ என்று கடைசி நிமிடம் வரை எதிர்பார்த்தார் திவாகரன். முதல்வருக்கும் திவாகரனின் பிள்ளைகள் மேல் எந்தக் கோபமும் கிடையாது. அதனால¢ அவர் மனம் மாறி சசிகலாவை அனுப்பி வைப்பார் என்று நம்பினார். குடும்ப சென்டிமென்ட் அக்காவை வரவழைத்துவிடும் என்றும் பலவிதமாக சமாதானம் சொல்லிக்கொண்டு காத்திருந்தார். தனது மகனுக்கு ஜெய ஆனந்த், மகளுக்கு அம்மு என்கிற ராஜமாதங்கி என்று பெயர் வைத்ததும் முதல்வர் மீதான பற்றால்தான். ஆனால் எதுவுமே ஒர்க்-அவுட் ஆகவில்லை.

மணமக்கள் வந்து மேடையில் உட்கார்ந்ததும் அடிக்கடி கடிகாரத்தையும் வாசலையும் பார்த்தபடி இருந்தார். முகூர்த்த நேரம் நெருங்கியதும், இனி வரமாட்டார் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டது. திவாகரன் கண்களில் கண்ணீர் பெருகியது. மணப்பெண் ராஜமாதங்கியின் கண்கள¤லும் கண்ணீர். யாரும் சமாதானம் சொல்ல முடியாத சூழ்நிலை. அவராகவே மனத்தைத் தேற்றிக்கொண்டு திருமணத்தை முடிக்கச் சொல்லிவிட்டார்'' என்றனர்.

வேறு சிலரோ, ''தேர்தல் நேரத்தில் சசிகலா திருமணத்துக்கு வந்தால், மக¢கள் மத்தியிலும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் தேவை இல்லாத விவாதங்களை உருவாக்கும். 'நடராஜன் நிச்சயம் கல்யாணத்துக்கு வருவார். நீயும் அங்கு சென்றால், தேவையில¢லாத சர்ச்சைகளை உண்டாக்கும்’ என்று முதல்வரே சசிகலாவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அதனால் சசிகலா மணமக்களை சென்னைக்கு வரச்சொல்லியிருக்கிறார். சசிகலாவே முதல்வரிடம் அழைத்துச்சென்று ஆசி வழங்க ஏற்பாடுசெய்வார்'' என்று ஆறுதல் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

'குடும்பமா, தோழியா? சசிகலாவுக்கு அம்மா வைக்கும் ஆசிட் டெஸ்ட் இது’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ரத்த சொந்தங்களை வைத்தா டெஸ்ட் வைப்பது?

- ஏ.ராம், படம்: கே.குணசீலன்