கவலையை மறந்து இப்போதுதான் சிரிக்க ஆரம்பித்துள்ளார் சிறுத்தைகள் தலைவர். தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரசாரத்துக்கும் கிளம்பிவிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?''

''தமிழகத்தில் பலமுனைப் போட்டி நிலவினாலும் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையில்தான் உண்மையான போட்டி நிலவுகிறது. சமூகநீதி, மதச்சார்பின்மை, தமிழர் நலன்களைக் காப்பதில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் நிச்சயம் ஜெயிக்கும். அதற்கு விடுதலைச் சிறுத்தைகளும் பக்கபலமாக இருக்கும். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெற்றால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியும். அடுத்த தேர்தலில் எங்களுக்கென சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடியும். அந்த எண்ணத்துடன்தான் இந்தத் தேர்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையே நடக்கும் அறப்போராட்டம்தான் இந்தத் தேர்தல். என்ன... மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் ஆளுக்கொரு முகாமில் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த ஆபத்தானச் சூழலில் இருந்து சமூகநீதியைப் பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உண்டு. அதை உணர்ந்துதான் நாங்கள் சமூகநீதிக் கூட்டணியில் இணைந்துள்ளோம். மதவாத சக்திகள் ஜெயித்தால் சமூகநீதி சவக்குழிக்குப் போய்விடும். சமூகநீதி மீது நம்பிக்கை கொண்ட அத்தனைப் பேரும் எங்களோடு கைகோத்துப் போராட வர வேண்டும்.''

''அப்படிப் பார்த்தால் இதற்கு முன்பே பி.ஜே.பி. ஆட்சியில் இருந்திருக்கிறதே?''

''மதவாதக் கருத்தியலை முன்வைக்கும் கட்சிகள், தேர்தல் அரசியலில் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றன. அவர்கள் ஏற்கெனவே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததற்கும், இப்போது போட்டியிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 1999-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் வாஜ்பாய். பல்வேறு மாநிலக் கட்சிகள் அவர்களுடன் கூட்டணி அமைத்தன. இப்போது நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர். குஜராத்தின் முதலமைச்சராக இருந்து அவர் செய்துள்ள சாதனைகளைவிட, அவரது கோட்பாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும். அவர், பாரதிய ஜனதா கட்சியிலேயே மிகவும் தீவிரவாதப் போக்கு கொண்டவர். குஜராத்தில் 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல், அதை ஊக்கப்படுத்தினார் என்பதும் அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டு.

அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் மதக்கலவரத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கடும்போக்கு கொண்ட ஒருவரை இப்போது தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அந்தக் கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு, பிரதமர் வேட்பாளரை நியமித்ததில் முக்கியப் பங்கு உண்டு.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதது. சில முறை மத்திய அரசே அந்த அமைப்பை தடைசெய்தும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எப்படித் தேர்தல் அரசியலை நிர்ணயிக்க முடியும்? இந்தத் தேர்தலை உண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்புவாத கொள்கைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியாகவே நாங்கள் பார்க்கிறோம்.''

''நரேந்திர மோடியால் சமூகநீதிக்கு ஆபத்து என்கிறீர்களா?''

''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது புரட்சியாளர் அம்பேத்கர், 'அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாக்கு; எல்லா வாக்குகளுக்கும் ஒரே மதிப்பு என்ற அரசியல் சமத்துவத்தை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார். அந்த அரசியல் சமத்துவத்தை சமூக, பொருளாதாரத் தளங்களுக்கு விரிவுப்படுத்தவில்லை என்றால், நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. சமூகத்தின் கீழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளவர்களை மற்றவர்களோடு சமமாக வைப்பதற்கு செய்யப்படும் முயற்சிகளே சமூகநீதி நடவடிக்கைகள். இட ஒதுக்கீடு என்பது அதில் ஓர் அம்சம். ஏற்கெனவே பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த காலத்தில் சமூகநீதி கொள்கையை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி எழுதுவதற்காக நீதிபதி வெங்கடாச்சலய்யா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. நாடு முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுவைக்க நேர்ந்தது. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த முயற்சியில் திரும்பவும் ஈடுபடுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் காவல் அரணாகத் திகழும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் காப்புக் கூறுகளை அழித்தொழிப்பதே அவர்களது நோக்கம். இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்புகள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்தை ஒழித்துவிட்டால், சமூகநீதி இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஆபத்து இல்லாமலா போய்விடும்?''

''விஜயகாந்த், வைகோ, கம்யூனிஸ்ட்கள் என்று எல்லோரிடமும் நீங்கள் பேசினீர்களே... என்னாச்சு?''

''வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்ட்கள் முனைப்புடன் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே, மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது; மதவாதம் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது; அதற்கு ஏற்ப முடிவெடுங்கள் என்றுதான் அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். ஆனால், இப்போது விஜயகாந்த், வைகோ ஆகியோர் ஒரு முடிவு எடுத்துவிட்டனர். அது முடிந்துபோன விஷயம். அதுபற்றி இனி பேசி பயன் இல்லை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட்டால், அவர்கள் நிற்கும் தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று வைகோ நினைக்கிறார். இலங்கைப் பிரச்னையைப் பொறுத்தவரை காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஒன்றுதான் என்பது கடந்த கால வரலாற்றைப் புரட்டினால் புரியும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கையில் தமிழர்கள் வணங்கும் இந்து கோயில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. அப்போது பி.ஜே.பி. அரசு கைகட்டி வேடிக்கைப் பார்க்கத்தான் செய்தது என்பதை வைகோ நினைவில் நிறுத்த வேண்டும்...''

''பாரதிய ஜனதா கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் சேர்ந்துவிட்டாரே?''

''தம்மை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் முகம் வெளுத்துவிட்டது. கடந்த காலங்களில் மதவாதத்தை எதிர்த்து களம்கண்ட மாநிலக் கட்சிகள் பலவும் இப்போது பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்னும் சில கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு கூட்டு சேரும். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டித்தான் ராம்விலாஸ் பஸ்வான் பி.ஜே.பி. கூட்டணியில் இருந்து வெளியேறினார். இன்று அவர் அதே கூட்டணிக்குச் சென்றுவிட்டார். இது மதச்சார்பற்ற சக்திகளுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு நிலையின் அடையாளம். நிச்சயம் இது ஒருநாள் மாறும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!''

- எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: கே.ராஜசேகரன்