எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

காமராஜர், மூப்பனார் போன்றவர்கள் இருந்திருந்தால், தமிழக காங்கிரஸ் இப்படி ஆகியிருக்குமா?

காமராஜர் காலத்திலேயே காங்கிரஸ் படுதோல்வியைத் (1967) தழுவியது. மூப்பனாராலேயே 1989 தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறவைக்க முடியவில்லை. காமராஜர் பேச்சை இந்திராவும் மதிக்கவில்லை. அதனால், அவர் தனியாகப் பிரிந்தார். மூப்பனார் பேச்சை டெல்லித் தலைமை ரசிக்காததால், அவருமே 1996-ல் தனிக் கட்சி தொடங்கினார். டெல்லி தலைமையை எதிர்த்து இவர்களால் எதிர்நீச்சல் போட முடியவில்லை.

மேலும், காமராஜர் தன் காலத்தில் செய்யாத தவறை, அதாவது இந்திராவுடன் மீண்டும் இணைவதை மூப்பனார் செய்தார். மூப்பனார் தன் காலத்தில் செய்யாத தவறை, அதாவது சோனியாவுடன் மீண்டும் இணைவதை ஜி.கே.வாசன் செய்தார். இன்று ஜி.கே.வாசன் நிம்மதி இல்லாமல் தவிக்க, அவரே ஒரு காரணம்தான்!

அ.குணசேகரன், புவனகிரி.

தேர்தலில் போட்டியிட்டால் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் வெற்றிபெறக்கூடியவர்கள் யார் யார்?

ப.சிதம்பரம் சிவகங்கையிலும், ஜி.கே.வாசன் மயிலாடுதுறையிலும் ஓரளவு மரியாதைக்குரிய வாக்குகளை வாங்கலாமே தவிர, வெற்றிபெற முடியாது. அவர்களுக்கே இந்தக் கதை என்றால், கடந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் நின்றே வெற்றி பெற முடியாத தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர் போன்றவர்களால் தனித்து எப்படி வெல்ல முடியும்? மேலே குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளோடு சேர்த்து திருநெல்வேலி, திண்டுக்கல், புதுச்சேரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய ஐந்தும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கி இருக்கும் தொகுதிகள்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஒரு சபதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிகபட்சம் ஒரு லட்சம் வாக்குகளாவது வாங்கி, தமிழகத்தில் குறைந்தபட்சம் 30 லட்சம் காங்கிரஸ் வாக்குகள் இருக்கின்றன என்பதை நிரூபித்தாக வேண்டும். அதைச் செய்து காட்டினால்தான் அந்தக் கட்சிக்கு எதிர்காலம் உண்டு என்பதை உணர முடியும்.

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

'ராஜதந்திரம் தெரிந்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும்’ என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளாரே?

எதிர்காலத்தைக் கணிக்கத் தெரிந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்குக் கடந்த காலம் மறந்திருக்காது. ஜெயலலிதா நான்கு பேரைப் பார்த்து, 'நீங்களெல்லாம் உதிர்ந்த ரோமங்கள்’ என்று சொன்னார். அவர்கள் யார் யார்?

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தே.மு.தி.க., காங்கிரஸுடன் இணைந்து தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து, கணிசமான இடங்களைப் பிடிக்கும். ஆனால், மத்தியில் அழகிரி, கனிமொழி, தயாநிதி போன்றவர்கள் செல்வாக்குப் பெறுவார்கள். இது தனக்குத்தான் தலைவலி என்று தெரிந்தே தி.மு.க. - காங்கிரஸ் - தே.மு.தி.க. கூட்டணியை ஸ்டாலின் தவிர்த்துவிட்டார் என்கிறார்களே?

மீஞ்சூரில் இருந்தபடியே ஸ்டாலின் மனதைப் படம் பிடித்துவிட்டீர்களே!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

திராவிடக் கட்சிகளிடம் மண்டிக்கிடப்பதில் வேதனையான விஷயங்கள் என்னென்ன?

தனிமனிதத் துதி, தரக்குறைவான விமர்சனங்கள், ஆடம்பரம், அளவுக்கு மீறிய பகைமை, பண மயக்கம், கொள்கைச் சுணக்கம். தமிழகத்தை மாறிமாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒரு அளவுக்கு மேல் வளரவிடாமல் தடுத்தவை இந்த ஆறு விஷயங்கள்தான்!

சக்திப்ரியா ப்ரியதர்ஷினி சித்தப்பா, வேதாரண்யம்.

உண்மையைச் சொல்லுங்கள், தற்போதைய தமிழக அரசியல் யாரை மையமாக வைத்துச் சுழல்கிறது?

இதில் பொய் சொல்வதற்கு என்ன இருக்கிறது? தமிழ்நாடு அரசியல் எப்போதுமே வாக்காளர்களை மையமாக வைத்துத்தான் சுழல்கிறது. அவர்கள் கையில் இருக்கும் வாக்குகளை வாங்குவதற்குத்தானே இத்தனை குத்துவெட்டுகள், கழுத்தறுப்புகள், காய் நகர்த்தல்கள்!

செ.கணபதி, பெங்களூரு.

ம.நடராசன் என்ன ஆனார்?

மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார். 'யாரைப் பற்றியும் அவருக்குப் பயம் கிடையாது. நினைத்தால் வெளிநாட்டுக்குப் பயணம் போய்விடுகிறார். சுதந்திரமாகத்தான் இருக்கிறார்!

பி.எஸ்.பூவராகவன், படியூர்-1.

'கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வை யாராலும் காப்பாற்ற முடியாது’ என்று மு.க.அழகிரி கூறியிருக்கிறாரே?

வயிற்றெரிச்சலில் மு.க.அழகிரி இப்படிச் சொல்லியிருக்கிறார். அவரை இவ்வளவு வளர்த்ததும் வசதி படைத்தவராக ஆக்கியதும் தி.மு.க-தான். அவர் செய்துவரும் காரியங்கள் முதலுக்கே மோசமாகி வருகின்றன.

ஆர்.பி.ப்ரியன், மழையூர்.

சரத்குமார் எதிர்பார்த்த ஒரு சீட் கிடைக்காத காரணத்தால் கோபித்துக்கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா?

'நாட்டாமை’ கோபத்தை நிஜத்தில் காட்டமுடியுமா சார்? காட்டினால் உள்ள எம்.எல்.ஏ. பதவியும் பறிபோய்விட்டால் என்ன ஆவது?

ஆர்.அஜிதா, கம்பம்.

'பிற கட்சிகளுக்கு, ஓட்டு போட்டால் அது எதற்கும் உதவாது’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

அவருக்கு ஏதோ ஒரு பயம் பற்றிக்கொண்டு இருப்பதன் வெளிப்பாடு இது.

கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

நம்பவைத்து கழுத்தை அறுப்பது, நம்பிக்கைத் துரோகம் - விளக்க முடியுமா?

இதில் விளக்குவதற்கு என்ன இருக்கிறது? கடந்த வார நிதர்சனங்களாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றனவே!

பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன் புதூர்.

'ஐ.நா. தீர்மானத்தைப் பார்த்து பயப்படப்போவதில்லை’ என்கிறாரே ராஜபக்ஷே?

ரத்தத்தைப் பார்த்தே பயப்படாதவர். தீர்மானத்தைப் பார்த்தா பயப்படுவார்?

சீனாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட இலங்கையைச் சீண்டுவதற்கு, அமெரிக்கா கண்டுபிடித்த அஸ்திரம்தான் ஐ.நா. தீர்மானம் என்பதை அறியாதவரா மகிந்த ராஜபக்ஷே. அவரது மனச்சாட்சி தினந்தோறும் தந்துகொண்டிருக்கும் தண்டனையைத்தான் அவரது மிரண்ட முகத்தில் பார்க்கிறோமே!

கி.ரந்தீர், பெரியநாயக்கன்பாளையம்.

தமிழ்நாட்டில் ஐந்துமுனைப் போட்டியால் யாருக்கு லாபம்?

ஆளுங்கட்சிக்குத்தான் லாபம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது முழுமையான லாபமாக அமையுமா என்பதுதான் பெரும் சந்தேகம்.

ரேவதிப்ரியன், ஈரோடு.

'சோனியாவை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை’ என்று சொல்லிவிட்டாரே கெஜ்ரிவால்?

'முன்னாள் முதல்வர்’ என்ற பட்டத்தை தனக்கு முன் போட்டுக்கொள்ளும் மகுடம் சூட்டியவர் சோனியா அல்லவா? கெஜ்ரிவால், நன்றிக்கடன் ஆற்றுகிறார்!