எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

உண்மையைச் சொல்லுங்கள், ரஜினி யார் பக்கம்?

மன நிம்மதியின் பக்கம். அவருக்கு இப்போதுதான் உடல்நிலைதேறி நலம்பெற்று வருகிறார். 'கோச்சடையான்’ ரிலீஸ் ஆகி அது வெற்றி பெற வேண்டும். இதுதான் அவரது இப்போதைய நினைப்பாக இருக்க முடியும். மற்றபடி அரசியலைப் பற்றி நினைக்க அவருக்கு நேரம் இல்லை.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

'தி.மு.க-வில் வேட்பாளர்கள் தேர்வு அனைத்தும் பணத்தின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது’ என்கிறாரே மு.க.அழகிரி?

இதைக் கேட்டதும் ஜே.கே.ரித்தீஷ், அண்ணனை நினைத்துச் சிரித்தாராம்.

ராம், சேலையூர்.

வரப்போகும் தேர்தல் ஒரே குழப்பமாக நடைபெறும் எனத் தெரிகிறது. வாக்காளர்களுக்கு ஒரு நல்ல அறிவுரையைக் கூறுவீர்களா?

நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியா, பி.ஜே.பி. ஆட்சியா என்பதற்கான தேர்தல் இது. அதனை மனதில்வைத்து வாக்களிக்க வேண்டும். இதில் குழப்பம் அடைய எதுவும் இல்லை.

ஜே.கே.தமிழோவியன், துறையூர்.

பி.ஜே.பி. கூட்டணியில் வைகோ மட்டும் அமைதியாக இருப்பது பக்குவமா... பயமா?

உணர்ச்சிவசப்பட்டதால் இழந்ததுதான் அதிகம் என்று வைகோ நினைத்து அமைதியாகி இருக்கலாம். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது அவரது முதல் தவறு. 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தது அடுத்த தவறு. அதுவே 2009 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு அடிப்படையாகவும் மாறிப்போனது. அவசர முடிவுகள்தான் இதற்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்திருப்பார்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கூட்டணி இல்லை என்றவுடன் காங்கிரஸ் பெருந்தலைகள், 'தேர்தலே வேண்டாம்’ என்று ஒதுங்குவதைக் கவனித்தீர்களா?

எப்படியாவது தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி அமைந்துவிடும் என்றே காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்த்தார்கள். அந்த நம்பிக்கையில்தான் 600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. இன்று கூட்டணி இல்லை என்றதும், போட்டியில் இருந்து ஒதுங்குவதற்கு ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டுமானால்... ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் ஆகிய ஐந்து பேராவது நிச்சயம் தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

இப்படி அவர்கள் போட்டியிடாமல் போவதால், தமிழகத்தில் காங்கிரஸுக்கு செல்வாக்கே இல்லை என்ற அவப்பெயர் வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்று இவர்களே நினைக்கிறார்கள் என்ற எண்ணமும் வாக்காளர் மனதில் விதைக்கப்படும். அதற்காகவாவது அவர்கள் போட்டியிட வேண்டும்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

'தி.மு.க. வைரம் பாய்ந்த மரம்’ என்று கருணாநிதி கூறுவது சரிதானே?

வைரம், வைடூரியம் பாய்ந்த மரம் என்பதுதான் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே தெரிகிறதே!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

பி.ஜே.பி-யை ஜெயலலிதா விமர்சிப்பதே இல்லையே?

அவரது இலக்கு காங்கிரஸும் தி.மு.க-வும்தான். பி.ஜே.பி. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு உடனடியாக ஓடிப்போய் ஆதரவு தரக்கூடியவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் விமர்சிப்பது இல்லை. மோடியும் தமிழகத்தில் கலந்துகொண்ட இரண்டு கூட்டங்களிலும் ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய ரகசிய ஒப்பந்தமாகவும் இது இருக்கலாம்.

தி.மு.க. மேடைகளில்கூட பி.ஜே.பி-யைப் பற்றிய விமர்சனங்கள் குறைவு. மோடியைப் பற்றி ஸ்டாலின் பேசுவது இல்லை. அவரது இலக்கு ஜெயலலிதா மட்டும்தான். காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த ஸ்டாலின், தனது பேச்சுக்களில் காங்கிரஸையும் விமர்சிக்கவில்லை.

எனவே இவர்கள் எல்லாம் பிரிந்து நிற்கிறார்களே தவிர, மறைமுகமாகச் 'சேர்ந்தே’ இருக்கிறார்கள்.

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

கூட்டணி பற்றி முடிவெடுப்பதிலும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் கருணாநிதியின் முழுமையான விருப்பத்துடன் நடக்கவில்லை என்ற செய்தி பற்றி?

இதைத்தான் கருணாநிதியே சொல்லிவிட்டாரே! 'எப்போதும்போல இந்த முறையும் கழக வேட்பாளர்களின் பட்டியலை செய்தியாளர்களிடம் படித்துவிட்டு வெளியே வந்தபோது, 'என் உள்ளம் என்னிடம் இல்லை. காரணம் என்ன என்பதை என்னை முழுவதும் அறிந்த நீ நன்றாக உணர்வாய்! ஆம், இந்த முறை தன்னலம் பாராமல் கழகத்துக்காகப் பல ஆண்டுகள் உழைத்த மூத்த சில உடன்பிறப்புகளின் விருப்பங்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை’ என்று கருணாநிதி எழுதி இருக்கிறார். அவராலேயே மறைக்க முடியவில்லையே!

இ.பா.ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

பிரதமரை அழகிரி சந்தித்தது ஏன்?

மன்மோகனின் பதவிக் காலமே முடியப் போகிறது. தன்னுடைய பெயர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாத வருத்தத்தில் இருப்பவரை அழகிரி ஏன் போய் பார்க்க வேண்டும்?

டெல்லியில் ஒரு தகவல் சொல்கிறார்கள். சோனியாவைச் சந்திக்கத்தான் அழகிரி நேரம் கேட்டாராம். ஆனால், அதனை மறுத்துவிட்டாராம் சோனியா. 'ஏற்கெனவே நம்மோடு கருணாநிதி கூட்டணிவைக்க தயக்கம் காட்டிவருகிறார். இந்த நிலைமையில் அழகிரியைச் சந்தித்தால் நிலைமை இன்னும் மோசமாகும். மேலும், அரசியல்ரீதியாக இந்தச் சந்திப்பு சிக்கலை ஏற்படுத்தும்’ என்று நினைத்தாராம் சோனியா. பிரதமரைச் சந்தித்தால் அது ஏதோ நிர்வாகரீதியான சந்திப்பாகப் போய்விடும் என்று திட்டமிட்டுத்தான் மன்மோகனைச் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

உமரி.பொ.கணேசன், மும்பை.

கடந்த தேர்தலில் ஒரு கட்சி தனித்துநின்று வாங்கிய வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைக்குமா?

அப்படிச் சொல்ல முடியாது. உதாரணமாக தே.மு.தி.க-வை எடுத்துக்கொள்வோம். அவர்கள் 2009 தேர்தலில் விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளை தனித்துநின்று வாங்கினார்கள். இது தே.மு.தி.க-வின் வாக்குகள் மட்டுமல்ல; அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வைப் பிடிக்காதவர்களின் வாக்குகளும் இதனுள் அடக்கம். அதுவரை விஜயகாந்த் எந்தப் பதவியிலும் இல்லை. அதனால் அவருக்குக் கெட்ட பெயர் எதுவும் இல்லை. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்பதால், அவரது செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் ஆதரவும் பலமாக எழுந்துள்ளன. எனவே, ஒரு தேர்தலில் வாங்கிய வாக்கு அடுத்தத் தேர்தலிலும் தொடரும் என்று சொல்லவே முடியாது!