கோடையின் தாக்கம் கோரதாண்டவம் ஆடுகின்ற நிலையில், மீண்டும் மின்வெட்டு பிரச்னை

தமிழகத்தை வாட்டத் தொடங்கிவிட்டது. இந்தச் சிக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதால், செய்வது அறியாது கைபிசைந்து தவிக்கிறது அ.தி.மு.க. அரசு.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு நிலவுகிறது. சில மாவட்டங்களில் நான்கு மணி நேரமும் சில மாவட்டங்களில் ஆறு மணி நேரமும் மின்வெட்டு இருக்கிறது. கிராமப் பகுதிகளில் எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலை நீடிக்கிறது. இரவு நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வயதானவர்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இப்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், மாணவர்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கோவை, திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட தொழில் நகரங்களிலும் ஐந்து முதல் ஏழு மணி நேர மின்வெட்டு நீடிப்பதால், தொழில்கள் பாதிப்படைந்து கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தொழிலதிபர்கள் புலம்புகின்றனர். சிறிய நிறுவனங்கள் மின்வெட்டை சமாளிக்க முடியாமல் மூடப்படுகின்றன. அதனால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் கந்துவட்டி பிரச்னைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் மின்வெட்டு காரணமாக கோழி வளர்ப்பு மற்றும் முட்டைகளைப்

பராமரிப்பது போன்றவற்றில் பெரும் இழப்பைச் சந்திப்பதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் வேதனைப்படுகின்றனர். மீன் வலை தயாரிப்புத் தொழில், உதிரிபாகங்கள் உற்பத்திசெய்யும் தொழிற்கூடங்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் உற்பத்தி மையம் என அனைத்து சிறு, குறு தொழில்களும் முடங்கி இருப்பதால், வேலை வாய்ப்பு இல்லாமல் மக்கள் அன்றாட உணவுக்கே அவலப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக மின்வெட்டு பிரச்னை இருந்தது. அதைவிடவும், இப்போது அதிக நேரம் மின்வெட்டு நிலவுவதால், மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இந்த விவகாரம் நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

இந்த விவகாரம் குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கேட்டதற்கு, ''இப்போது தமிழகத்தின் மின் உற்பத்தித் திட்டங்கள் சிலவற்றில் இயந்திரப் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நமக்கு வரவேண்டிய 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நமக்குக் கிடைத்துவந்த 400 மெகாவாட் மின்சாரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அணு மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், சில தினங்களாக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதனை விரைவில் சரிசெய்து மின்சாரத்தை உற்பத்திசெய்ய வலியுறுத்தி தமிழக மின்வாரியத் துறை அதிகாரிகள் மூலம் அணு உலை நிர்வாகத்திடம் பேசிவருகிறோம். சீக்கிரமே அங்கிருந்து மின்சாரம் கிடைக்கும் என நம்புகிறோம்.

தவிர, மேட்டூரில் இயந்திரப் பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. இதேபோல, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை. இந்த பழுதுகளைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யும் பணி நடந்துவருகிறது. ஓரிரு நாட்களில் இந்தக் குறைப்பாடுகளை நீக்கிவிடுவோம்.

வடக்கு, தெற்கு மின் தொகுப்புகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டபோதிலும், இன்னும் முடிவடையவில்லை. வரும் ஜூன் மாதத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் முடிவடைந்தால், தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதனால், வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்கிற பிரச்னையே இருக்காது. இப்போது ஏற்பட்டு இருக்கும் எதிர்பாராத சிக்கலை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதனால் இந்த விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார் திட்டவட்டமாக.

ஏற்கெனவே தனித்து களம் இறங்கி இருக்கும் அ.தி.மு.க., கண் முன்னே நிற்கும் இந்த இருட்டுப் பிரச்னையை சமாளிக்க என்ன செய்யப்போகிறது?

- ஆண்டனிராஜ், சு.குமரேசன்

படம்: தி.விஜய்