எஸ்.ஈஸ்வர பிள்ளை, கொல்லம்.

மோடியும் ஜெயலலிதாவும் சோவின் இரண்டு கண்கள் என்கிறேன். சரியா?

அவரிடம் இதைக் கேட்டால், 'இவர்கள் இரண்டு பேரையும் பார்ப்பதற்கு முன் எனக்கு கண்ணே இல்லையா?’ என்று கேட்பார்!

கலைஞர் ப்ரியா, வேலூர் (நாமக்கல்).

'தமிழகத்தில் பி.ஜே.பி. கூட்டணி 25 இடங்களில் வெற்றிபெறும்’ என்று அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சொல்லியிருக்கிறாரே?

அப்படிச் சொன்னால்தானே அவர் பி.ஜே.பி. தலைவர்?

சங்கீதா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

'பி.ஜே.பி-யை ஆதரிக்கவே, திட்டமிட்டு எங்களுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக்கொண்டார்’ என்று சி.பி.எம். செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?

ஜெயலலிதா, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கழற்றிவிடுவதற்கு இரண்டு காரணங்கள்.

மூன்றாவது அணி, பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்கவில்லை என்பது முதல் காரணம். மேலும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு மூன்றாவது அணி கூடுதலான இடங்களைக் கைப்பற்றும் என்று ஜெயலலிதா நம்பவில்லை. அதனால்தான், அவர் கூட்டணியை முறித்துக்கொண்டார். இவைதான் உண்மையான காரணங்கள். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றுவிட்டு, பி.ஜே.பி-யை தேர்தலுக்குப் பிறகு ஆதரிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன?

சக்திப்ரியா சூர்யா, வேதாரண்யம்.

'நாங்கள் பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்’ என்று அடிக்கடி அரசியல்வாதிகள் சொல்கிறார்களே... அதற்கு என்ன அர்த்தம்?

காய்ந்த பனை ஓலைகளை மிதித்தாலோ ஒடித்தாலோ ஓசை கேட்டுக்கொண்டேதான் இருக்கும். பனங்காட்டில் இருக்கும் நரி, இந்த ஓசையைக் கேட்டு பயந்துகொண்டே இருக்க முடியுமா? அதற்கு அந்தப் பனை ஓசை பழகிப்போகும் அல்லவா? இந்த மாதிரியான சலசலப்புக்கு நரிகள் அஞ்சாததைப் போலவே, நாங்களும் யார் பயமுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம் என்று சொல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

இப்படிச் சொல்பவர்கள் அனைவருமே கறுப்பு, காக்கி பூனை பாதுகாப்புடன் வலம்வருபவர்கள்தான்!

இரா.துரையரசு, ராஜபாளையம்.

'அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் கலைஞர்தான் என்று தந்தைப் பெரியார் தேர்வுசெய்தார்’ என்று கி.வீரமணி சொல்லியிருக்கிறார். அது உண்மைதான் என்றாலும், பெரியாரின் நம்பிக்கையை கருணாநிதியால் காப்பாற்ற முடிந்ததா?

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பெரியார் எப்போதும் நம்பிக்கை வைத்ததே இல்லை. காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் முதலமைச்சர் நாற்காலியில் இருந்தபோது, அவர்களை பெரியார் ஆதரித்தார். 'எனக்கு சொந்த நலன் இல்லை. இனநலன்தான் இருக்கிறது. அதற்கு பாடுபடுபவர்களை ஆதரிப்பேன்’ என்று சொன்னார் பெரியார். 'பொதுமக்களிடம் வாக்குக்கேட்டு பதவியில் உட்காருபவர்களால் கொள்கையைக் காப்பாற்ற முடியாது’ என்பதில் உறுதியாக இருந்தார் அவர். எனவே, கருணாநிதியால் பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றிருக்க முடியாது!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

மு.க.அழகிரி, தி.மு.க-வுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காமலாவது இருக்கலாமே?

'நான் அதிக வேகத்தோடு, ரத்தம் சூடாக இருந்த காலத்தில் பிறந்தவன் அழகிரி. பக்குவம் அடைந்த காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின். இருவரது நடவடிக்கையைப் பார்க்கும்போது, நீங்கள் தெரிந்துகொள்ளலாம்’ என்று அழகிரியின் இரண்டாவது மகள் அஞ்சுகச்செல்வியின் திருமணத்தில் பேசும்போது கருணாநிதி சொன்னார். இயல்பு ரத்தத்தில் இருக்கும்போது என்ன செய்ய முடியும்?

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

இப்போது பி.ஜே.பி-யுடன் கூட்டுசேர்ந்துள்ள கட்சிகளின் கோரிக்கைகளை, அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தால் நிறைவேற்றுமா?

'இந்திய ஐக்கிய நாடுகள்’ என்று மாற்ற வேண்டும் என்று ம.தி.மு.க. சொல்கிறது. ஆனால், 'பாரதம்’ என்று மாற்ற வேண்டும் என்று பி.ஜே.பி. சொல்கிறது. முழுமையாக மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்று வைகோ சொல்கிறார். அதனை பி.ஜே.பி. ஏற்காது. எனவே, இந்தக் கோரிக்கைகள் எல்லாம் அந்தந்தக் கட்சியின் தனிப்பட்ட கோரிக்கைகள்தானே தவிர, அது பி.ஜே.பி. கூட்டணியின் கொள்கைகள் ஆகாது. 'குறைந்தபட்ச செயல்திட்டம்’ என்பதை பி.ஜே.பி. தயாரித்தால் மட்டுமே, அதில் உள்ள விஷயங்களைச் செய்ய போராடவோ, செய்ய மறுத்தால் வாதாடவோ முடியும்!

போத்தனூர் புலிச்சோழன், கோயம்புத்தூர்-23.

தேர்தலைக் கண்டு பயப்படாத கட்சி எது - தமிழ்நாட்டில்?

தைரியமாக 40 தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் ஞானதேசிகனையும் இதற்காகவாவது பாராட்டுவோமே!

எஸ்.சிவசுப்பிரமணியன், மேடவாக்கம்.

தாளமுத்து நடராசன் மாளிகை என்று பெயர் வைக்க என்ன காரணம்?

1938 காலகட்டத்தில் சென்னை ராஜதானியை ஆண்ட ராஜாஜி, கட்டாய இந்திப் பாடத்தைக் கொண்டுவந்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தலைவர்களும் தமிழறிஞர்களும் போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர்கள்தான் இந்த தாளமுத்துவும் நடராசனும். அவர்கள் இருவரும் சிறையில் இறந்துபோனார்கள். அவர்களது நினைவாக அந்தப் பெயர் எழும்பூரில் உள்ள அரசு கட்டடத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

வசந்தாகாந்த், கருப்பம்புலம்.

ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடாததன் மர்மம் என்ன?

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தாலும், ப.சிதம்பரம் போட்டியிட்டிருக்க மாட்டார். சமீபகாலமாக தனது நட்பு வட்டாரத்தில் ப.சி. அதனைச் சொல்லிவந்தார். சிவகங்கையை மகன் கார்த்திக்கு என்று ஒதுக்கி வைத்துவிட்டார் சிதம்பரம்.

ஜி.கே.வாசன் போட்டியிடாதது காங்கிரஸ் தலைமை மீதான கோபம்தான். தன்னை டெல்லி தலைமை மதிப்பது இல்லை; ஆலோசனைகள் கேட்பது இல்லை; அதிகாரங்கள் அளிப்பது இல்லை என்ற வருத்தம் அவருக்குப் பல மாதங்களாக இருக்கிறது. அந்த எதிர்ப்பைக் காட்டுவதற்காகத்தான் போட்டியிடவில்லை!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்களெல்லாம் கடும் அதிருப்தியில் இருப்பது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் பாதிக்காதா?

அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்கள் யாரும் தன்னுடைய தேர்தல் வெற்றிக்குத் தேவையில்லை என்று மோடி நினைக்கிறார்.

தனி மரம் தோப்பு ஆகாது!

அ.ராஜா ரஹ்மான், கம்பம்.

பாக்யராஜ் எந்தக் கட்சியில் இருக்கிறார்?

தி.மு.க-வில்தான் இருக்கிறார். ஆனால் ஆக்டிவ்-ஆக இல்லை. அரசியலிலும் அவருக்கு ஆர்வம் அதிகம் இல்லை. 'துணை முதல்வர்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். பாக்யராஜ் தங்கள் கட்சியில் இருப்பது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் ஞாபகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை!