''இந்த தேசத்தில் நல்லவர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால், தனித்தனியாக இருக்கிறார்கள். தீமையை நினைப்பவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் சாபக்கேடு. இப்போது நல்லவர்கள் எல்லோரும் ஒன்றுகூடியுள்ளோம்!'' என்ற அறிமுகத்துடன் ஆரம்பமானது அந்த விழா.

'நல்லோர் வட்டம்’ என்ற பெயரில் இயங்கும் அந்த அமைப்பு, கடந்த 26-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விதத்தில் 'நிமிர்ந்து நில்’ படத்தை எடுத்த இயக்குநர் சமுத்திரக்கனிக்கு நன்றி சொல்லும் கூட்டம் அது. சிறப்பு அழைப்பாளராக சகாயம் ஐ.ஏ.எஸ். வந்திருந்தார்.

இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, ''லஞ்சம் கொடுத்தால் இந்த நாட்டில் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்பதை 'நிமிர்ந்து நில்’ படத்தின் வழியாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறோம். இது என் கற்பனை அல்ல. தமிழ்நாடு முழுக்க நடந்த சம்பவங்களின் தொகுப்புதான். லஞ்சம் வாங்கக் கூடாது என்பதைச் சொல்லக்கூட நாம் லஞ்சம் கொடுக்க வேண்டித்தானே இருக்கிறது!'' என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாகப் பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ்., ''பலரும் 'நிமிர்ந்து நில்’ படத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். சகோதரர் சமுத்திரக்கனி திரையில் காட்டியிருப்பது அத்தனையும் நிஜம். இங்கே நேர்மையாக இருப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. மதுரையில் நான் கலெக்டராக இருந்த சமயத்தில், கிரானைட் முதலைகளைப் பற்றி விவசாயிகள் என்னிடம் புகார் செய்தார்கள். அவர்களிடம் நான், 'தயவுசெய்து இன்னும் 15 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நான் இப்போது தலையிட்டால், உடனடியாக என்னை மாற்றிவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதைச் செய்து முடித்ததும் நடவடிக்கையில் இறங்குகிறேன்’ என்று சொன்னேன். அவர்களிடம் சொன்னபடி, 15 நாட்களுக்குப் பிறகு நான் நடவடிக்கையில் இறங்கினேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு மாறுதல் வந்துவிட்டது. இதுதான் இங்கே கிடைக்கும் நேர்மைக்கான பரிசு.

'செத்தவனை தமிழனாகப் பார்க்க வேண்டாம். அவன் தெலுங்கனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் என் நெஞ்சம் துடிக்கும். எல்லோரும் மனுஷங்கதானே!’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் என் எண்ணமும். அங்கே கொத்து கொத்தாக மனிதர்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்தில், நாம் இங்கிருந்து மானாடிக்கொண்டும் மயிலாடிக்கொண்டும் அல்லவா இருந்தோம். அந்த வேதனையை யாரிடம் சொல்வது!'' என்ற வருத்தத்துடன் முடித்தார்.

நிஜம்தானே!

- ந.கீர்த்தனா

படம்: தி.குமரகுருபரன்