Published:Updated:

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?

எம்.பரக்கத் அலிபடங்கள்: சாய் தர்மராஜ், ஜெ.முருகன், தே.சிலம்பரசன்

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?

எம்.பரக்கத் அலிபடங்கள்: சாய் தர்மராஜ், ஜெ.முருகன், தே.சிலம்பரசன்

Published:Updated:

ந்தத் தேர்தலில் ஜெயலலிதா மீதான மற்ற தலைவர்களின் குபீர் விமர்சனம், அவர் 'றெக்கை கட்டிப் பறக்கிறார்’ என்பதுதான்!

''ஆகாயத்தில் தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா பறக்க... பூமியில் ஆயிரக்கணக்கில் போலீஸ் குவிப்பு. ஆகாய வழிக்குக்கூட காக்கிகள் பாதுகாப்பா?'' என ஸ்டாலின் பின்னியெடுக்க, ''வான் வழியாகச் செல்பவருக்கு மண்ணில் நடப்பது எப்படித் தெரியும்? தமிழக மண்ணில் கால் பதிக்காத ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்!'' எனச் சாத்துகிறார் ப.சிதம்பரம்.

அகில உலகத் தலைவர்கள் பாணியில் 'பறந்து பறந்து பிரசாரம்’ செய்யும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணங்களுக்கான முஸ்தீபுகள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் காலத்தில் அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரை முதல்வர் பயன்படுத்த முடியாது. அதனால் தனியார் நிறுவனம் ஒன்றில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது புத்தம் புதிய BELL 412 VT - NAV ரக ஹெலிகாப்டர். இதில் இரண்டு விமானிகள், பராமரிப்பு இன்ஜினீயர் ஒருவர் உள்பட ஒன்பது பேர் பயணிக்கலாம். மெரூன் நிற ஹெலிகாப்டரில்தான் இந்தத் தேர்தலுக்கான அனைத்துப் பயணங் களையும் வகுத்துக்கொண்டிருக்கிறார் ஜெ.

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?

இந்த வகை ஹெலிகாப்டரில், பைலட்களின் காக்பிட்டுக்குப் பின்புறம் எதிரெதிர் திசையில் நான்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜெயலலிதா பயணிக்கும் ஹெலிகாப் டரில் மூன்று இருக்கைகள் மட்டுமே. ஜெயலலிதா அமரும் இருக்கைக்கு முன்புற இருக்கை நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் மேலும் வசதியாக அமர்ந்துகொள்ளலாம். ஜெயலலிதா இருக்கைக்கு அருகில் டீபாய் வடிவில் சிறிய மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தண்ணீர், பழரசம்... போன்ற பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய டி.வி. இருக்கும்.

ஹெலிகாப்டரில் ஜெயலலிதாவின் பி.ஏ. பூங்குன்றன், ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, கமாண்டோ வீரர் ஒருவர், இவர்கள் தவிர போயஸ் கார்டனில் வேலை பார்க்கும் இளம் பெண்கள் ஆகியோர் ஜெயலலிதாவுடன் பறக்கிறார்கள். பைலட் இருக்கைகளுக்குப் பின்புறம் உள்ள இருக்கைகளில் இரண்டு பணிப்பெண்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள்தான் தண்ணீர், பழரசம், சூப், கைக்குட்டை போன்ற ஜெயலலிதாவின் தேவைகளை அவரது கண் அசைவுக்கேற்ப நிறைவேற்றுகிறார்கள்.

பொதுவாக, இந்த ரக ஹெலிகாப்டருக்கு படிக்கட்டுகள் கிடையாது. ஆனால், ஜெயலலிதாவின் வசதிக்காக சின்னச் சின்ன படிக்கட்டுகள் கொண்ட 'ஏர் ஸ்டேர்’ ஒன்றை தயாரித்துவைத்திருக்கிறார்கள். தரையில் இருந்து ஹெலிகாப்டரில் ஏறி-இறங்குவதற்காக, சிவப்பு நிற தரை விரிப்புடன் ஒரு பக்கம் மட்டும் கைப்பிடி கொண்ட இந்த ஏர் ஸ்டேரில் மூன்று அடி உயரத்தில் ஆறு படிக்கட்டுகள் உள்ளன. இதை வெள்ளைத் துணியால் மூடி வைத்திருப்பார்கள். ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் துணியை எடுத்துவிட்டு ஹெலிகாப்டர் அருகே தூக்கி வருகிறார்கள் காவலர்கள்.

பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானங்களுக்கு அருகிலேயே ஹெலிபேட் அமைக்கப்பட்டிருக்கிறது. சில லட்சங்கள் செலவில் உருவாகும் அந்த ஹெலிபேட், பூமி பூஜை எல்லாம் செய்யப்பட்டு பக்காவாகத் தயாராகிறது.

ஹெலிகாப்டரில் பயணிக்கும்போது  ஜெயலலிதா பத்திரிகைகளையும் புத்தகங்களையும் புரட்டுகிறார். தேவைப்பட்டால் பூங்குன்றனிடம் சில தகவல்களைக் கேட்டுக்கொள்கிறார். கூட்டம் நடக்கும் இடத்துக்கு ஹெலிகாப்டர் வந்ததும், கூட்ட மைதானத்தை ஏரியலாக ஒரு வட்டமடித்த பிறகே தரை இறங்கும். 'ஏரியல் வியூ’வாக ஜனத்திரளை ஜெயலலிதா காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?

ஜெயலலிதா வான் வழிப் பிரசாரத்துக்கு மாறியது 2009 எம்.பி. தேர்தலின்போதுதான். 'ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து’ என்று தரைவழிப் போக்குவரத்தைத் தவிர்க்கச் சொல்லி அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுத, அதன் பிறகே ஆகாயமார்க்கமாகப் பிரசாரங்களில் பங்கெடுத்து வருகிறார் ஜெயலலிதா.

''கோடையில் உங்களை எல்லாம் வெயிலில் நிற்கவைத்தற்காக என்னை மன்னித்துவிடுங்கள். சுட்டெரிக்கும் வெயிலில் நீங்கள் சிரமப் படுவதைப் பார்த்து வேதனைப்படுகிறேன். உங்களை நேரிலேயே வந்து சந்திக்கத்தான் எனக்கு ஆசை. ஆனால், எனது உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்திருப்பதால் என்னோடு சேர்ந்து அப்பாவி பொதுமக்களும் பலியாக நேரிடுமே என அஞ்சித்தான் ஹெலிகாப்டர் மூலமாக உங்களைச் சந்திக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறேன்!'' என்று 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் 40 தொகுதிகளிலும் இந்த வசனத்தை மறக்காமல் உச்சரித்தார் ஜெ.

சரி... ஹெலிகாப்டர் பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்? ஒரு மணி நேரத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து மணி நேரத்துக்கு எட்டு லட்சம் வரை ஹெலிகாப்டரின் வசதிகளைப் பொறுத்து வாடகை வசூலிக்கப்படும். 2009-ம் ஆண்டு  தேர்தலில் மொத்தம்

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?

1 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 171 ரூபாயை வான் வழிப் பிரசாரத்துக்கு எனச் செலவழித்தார் ஜெயலலிதா. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் செலவு, தற்போது மூன்று மடங்காக உயரலாம் என்கிறார்கள். ஹெலிபேட், பொதுக்கூட்ட ஏற்பாடுகள், ஹெலிகாப்டர் வாடகை... என எல்லாவற்றையும் கணக்கிட்டால், செலவு ஏகத்துக்கும் எகிறும். வேட்பாளர்கள் தவிர கட்சித் தலைவர்களின் தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், தேர்தல் கமிஷனுக்குக் கணக்குக் காட்ட வேண்டும்.

எவ்வளவோ பண்ணிட்டாங்க... அதைப் பண்ண மாட்டாங்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism