ரமேஷ், விழுப்புரம்.

அத்வானியும் மோடியும் நட்பாகிவிட்டார்களா?

ஆம்! தேர்தல் முடிவுகள் வரும் வரை!

மு.அழகரசன், முத்துநாயக்கன்பட்டி.

திரும்பத் திரும்ப விலைவாசி உயர்வு, தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் என்றே பேசுகிறாரே ஸ்டாலின்... இது என்ன சட்டமன்றத் தேர்தலா?

அவர் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார் போலும். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை அவருக்கு யாராவது ஞாபகப்படுத்த வேண்டும்.

மத்திய காங்கிரஸ் அரசைப் பற்றி ஸ்டாலினால் என்ன பேச முடியும்? எதைப் பேசினாலும், 'ஒன்பது ஆண்டு காலமாக அந்த ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள்தானே நீங்கள்?’ என்று மக்கள் கேட்பார்களே... ஈழப் பிரச்னையை, மீனவர் மீதான தாக்குதலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வை, மத்திய ஆட்சியாளர்கள் மீதான ஊழலை தி.மு.க-வால் எப்படிப் பேச முடியும்? பி.ஜே.பி-யைப் பற்றி பேசலாம் என்றால், அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் தடுக்கிறது. அதனால்தான் காங்கிரஸ், பி.ஜே.பி-யைப் பற்றியே பேசாமல் ஜெயலலிதாவை மட்டுமே தாக்கி வருகிறார்.

தி.மு.க. லாஜிக்படி பார்த்தால், ஜெயலலிதாவே பிரதமர் வேட்பாளர்தானே?

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

இவ்வளவு நாட்களாகத் தூங்கிக்கொண்டு கிடந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள், தேர்தல் நேரத்தில் தூசி தட்டி எடுப்பதற்கு சதி ஏதாவது காரணமா?

இதில் சதி எதுவும் இல்லை. பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் அந்த வழக்கு நடந்து வருகிறது. இப்போது நடக்க வேண்டிய விவாதங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். அரசு வழக்கறிஞர் பவானி சிங், உடல்நலமின்மை காரணமாக நீதிமன்றத்துக்கு வர இயலவில்லை. அதனால் தடை ஏற்பட்டது. இப்போது அவர் மீண்டும் வந்துவிட்டதால் சூடு பிடித்துள்ளது. அப்போதே பவானி சிங் இந்த வாதங்களை எடுத்து வைத்திருந்தால் இன்று அமைதியாகக்கூட இருந்திருக்கும்.

எப்போதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய வழக்கை 17 ஆண்டுகள் இழுத்து அதனுடைய சூடு குறையாமல் பார்த்துக்கொண்டதே ஜெயலலிதா தரப்பின் நடவடிக்கைகள்தான்!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

'பி.ஜே.பி. மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைப் பிரச்னையில் தனித் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று சொல்கிறாரே பி.ஜே.பி. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்?

தனித் தமிழீழம் என்பது பி.ஜே.பி-யின் கொள்கை அல்ல என்பதை அந்தக் கட்சி பல முறை விளக்கிவிட்டது. இப்போது பிரச்னை, தனித் தமிழீழம் அமைக்க இந்தியா ஆதரவு தரவேண்டும் என்பது அல்ல. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமான ராஜபக்ஷேவுக்கு அனுசரணையாக காங்கிரஸைப்போல பி.ஜே.பி-யும் நடந்து கொள்ளுமா, இல்லையா என்பதுதான். 1983-ம் ஆண்டு முதல் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு பி.ஜே.பி என்ன செய்யப்போகிறது, கச்சத்தீவு விவகாரத்தில் பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்ன என்பதுதான் இப்போதைய கேள்விகள். அதனை

பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும்!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).

அ.தி.மு.க-வுக்கு வரவேண்டிய வாக்குகள் மோடிக்குப் போவதால் தி.மு.க. 20 இடங்களைப் பிடித்துவிடும் என்கிறார்களே?

தி.மு.க-வுக்கு வரவேண்டிய சிறுபான்மையினர் வாக்குகள் மூன்று அணிகளுக்கும் (தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க.) பிரிவதால் அ.தி.மு.க. அதிக இடங்களைப் பிடித்துவிடும் என்றும்தான் சொல்கிறார்கள். ஐந்து அணிகள் களத்தில் இருப்பதால் எவ்வளவு வாக்குகள் பிரியும் என்பதைக் கணிப்பதில் சிரமம் இருக்கிறது. ஓரளவு தெளிவுபிறக்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி சந்தித்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்?

நாஞ்சில் சம்பத்துக்கு சென்னையில் முதல் மேடையை வாங்கிக்கொடுத்தவர் பரிதி இளம்வழுதி. தான் பேசப்போகும் கூட்டத்தில் தனக்கு முன்னால் சம்பத்தை பரிதி பேசச் சொல்வார். இருவரும் தி.மு.க-வில் ஒன்றாக இருந்தார்கள். அதன் பிறகு ம.தி.மு.க. போனார் சம்பத். பரிதி, தி.மு.க-விலேயே இருந்தார். இருவரும் அந்தந்தக் கட்சியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ளார்கள். இவர்கள் சந்தித்தால் சொந்தக் கட்சியைவிட தாங்கள் இருந்த கட்சியைக் குறை சொல்லித்தான் பேசிக் கொள்வார்கள்!

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

எதிர்க்கட்சியாக இருந்தபோது பாண்டி கோயில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அழகிரியைப் பொளந்துகட்டிய ஜெயலலிதா, இன்று அதே இடத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அழகிரியைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே?

எப்படிப் பேசுவார்? அடுத்த கட்சியில் இருந்து ஜெயலலிதா கொடுக்கும் குடைச்சலைவிட அதிகமாக கருணாநிதிக்கு இப்போது அழகிரிதான் அவஸ்தைகள் தந்துகொண்டு இருக்கிறாரே. அது ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும். இந்த நேரத்தில் அழகிரியை விமர்சிக்கக் கூடாது என்ற அரசியல் அறியாதவரா ஜெயலலிதா?

வி.பரமசிவம், சென்னை-25.

பி.ஜே.பி. கூட்டணி - 21, அ.தி.மு.க. - 13, தி.மு.க. - 5, காங்கிரஸ் - 1 ; இதுதான் என்னுடைய கணிப்பு. எப்பூடி?

கமலாலயம் பக்கமாகப் போய்விடாதீர்கள். உங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கிவிடுவார்கள்!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

நடிகர், நடிகைகள் எல்லாம் தேர்தலில் நிற்பது எதற்காக?

நடிப்பதற்குத்தான்!

பி.எஸ்.பூவராகவன், படியூர்.

விஜயகாந்த் பிரசாரம் இந்த முறை எடுபடுமா?

விஜயகாந்த் பிரசாரத்தை பி.ஜே.பி-யினர் பெரிதாக நினைக்கிறார்கள். 'மோடியை கிராமப்புற மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தது இவர்தான்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இது எடுபட்டுள்ளதா என்பதை தேர்தல் முடிவுகள்தான் காட்டும்!

வி.பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி.

ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய் என்றே வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் ஐந்து வருடங்களுக்கு ஒரு நாளைக்கு 54 பைசா என்றால் மக்களுக்கு அரசியல்வாதிகள் பிச்சை போடுகிறார்களா?

பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு கூச்சம் வர வேண்டும்!