தேர்தல் என்றாலே பல காமெடிகள் களைகட்டும். இது மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த வேட்புமனு தாக்கல் காமெடிகள். படிங்க... அப்புறம் சிரிங்க.

காங்கிரஸ் வேட்பாளர் பாரத் நாச்சியப்பன் காலையிலேயே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர், அஃபிடவிட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று ஓர் ஆளை அனுப்பினார். இரண்டு மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார் அனுப்பிய ஆள். அடுத்து புகைப்படம் இல்லைஎன்று மறுபடியும் தாமதமானது. பிறகு மனுவை கலெக்டரிடம் கொடுக்கும்போது முன் மொழிபவர்களை அழைத்து வரவில்லை என்று அவர்களுக்காகக் காத்திருந்தார். இப்படியே மதியம் 2 மணியாகிவிட்டது. அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனோ, அம்மா குறித்துக் கொடுத்த 1 1/2 டூ 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வெளியில் பரிதவிப்போடு காத்துக்கிடந்தார். ''நாம ஃபிக்ஸ் பண்ணின நல்ல நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விவரமா மனு தாக்கல் செஞ்சுட்டுப் போயிட்டார்'' என்று கட்சியினர் சொல்லவே, பயந்துபோனார் அவர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த குப்பல் தேவதாஸ் என்பவர், மறைந்த மதுரை கம்யூனிஸ்ட்

கவுன்சிலர் லீலாவதியின் படத்தைக் கையில் ஏந்தியவாறு வந்தார். அவருக்குப் பின்னால் இரண்டு பேர் ஒரு சட்டியில் சில்லறை நாணயங்களைத் தூக்கிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தை வலம் வந்துகொண்டிருந்தனர். ''சில்லறை வியாபாரம் பண்றீங்களா?'' என்று நாம் கேட்க, ''நான் ஏற்கெனவே தே.மு.தி.க சார்பில் கும்பகோணத்தில் போட்டியிட்டேன். நாம் எதுக்கு ஒரு கட்சியிடம் பணம் கொடுத்து சீட் வாங்கி நிற்க வேண்டும், அந்தப் பணத்தை நாமே செலவழித்து சுயேட்சையாக நிற்கலாமே என்று ஐடியா கிடைத்தது. மதுரையில் எங்கள் சௌராஷ்டிரா மக்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்தும் எந்தக் கட்சியும் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்போது என்னை எங்கள் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறார்கள். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. தினமும் சில்லறை நாணயங்களை சேர்த்து வைத்தேன். அதைத்தான் டெபாசிட் கட்ட கொண்டு வந்துள்ளேன்'' என்றவர், கலெக்டர் அறைக்குள் சென்றுவிட்டு உடனே திரும்பி வந்தார். காரணம், அவரைப் பரிந்துரை செய்ய பத்து பேர் கையெழுத்திட்டிருக்க வேண்டுமாம். அது இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார். மறுநாள் வந்து மனு செய்தார். அவர் கூட வந்த ஒருவர், எங்கள் சமூகத்தின் சார்பாக நடத்தப்படுவது என்று பத்திரிகையொன்றை நம்மிடம் கொடுத்தார். அதில், 'வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சௌராஷ்டிரா மக்கள், பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரியுங்கள்’ என்று விளம்பரம் செய்யப்பட்டு, அதில் மதுரை தே.மு.தி.க வேட்பாளர் பெயரையும் போட்டிருந்தார்கள். நமக்கு தலை சுற்றியது.

ஜெயராம் என்ற வேட்பாளர் சட்டையில்லாமல் பனியனுடன் வேட்பு மனு என்று காகிதத்தில் எழுதி அதை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்ததும் பயந்துபோன போலீஸ்காரர்கள், தடுத்து நிறுத்தினார்கள். ''நான் வேட்பு மனுவைத் திரும்பப் பெற வந்தேன்'' என்று சொல்ல அதிகாரிகளோ, ''மனுவை திரும்பப் பெற வேறு தேதியில் வர வேண்டும், அப்படியே இருந்தாலும் இவர் மனுவே தாக்கல் பண்ணவில்லையே'' என்று சொல்ல, காவல் துறையினரும் அங்கிருந்த பத்திரிகையாளர்களும் மயக்க நிலைக்கு வந்து விட்டார்கள். நொந்தபடியே காவல் துறையினர் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினர். பத்திரிகையாளர்களிடம் வந்த அவர், ''நான் பெரிய பெரிய ஆட்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவன். நானும் இப்போது வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று நினைத்தேன். என்னுடைய தினசரி தேவையான மூனு குவாட்டரும், எட்டு பாக்கெட் சிகரெட்டும்(?) வாங்கவே வழியில்லாத என்னால் எப்படி டெபாசிட் பணம் 25,000 ரூபாயைக் கட்ட முடியும்? அதனால்தான் என்னுடைய வேட்பு மனுவை (வெள்ளைக் காகிதம்) கலெக்டரிடம் திருப்பிக் கொடுக்க வந்தேன்'' என்றார்.

சட்டக்கல்லூரி மாணவர் மணிகண்டேஷ்வரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். தமிழகத்திலேயே ஆன்லைன் மூலம் அஃபிடவிட் தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் இவர்தானாம். ''16 கல்லுரிகளில் பயிலும் மாணவர்களின் ஆதரவில் போட்டியிடுகிறேன். இந்த மாணவர்களின் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு வாக்களித்தாலே நான் சுலபமாக வெற்றி பெற்று விடுவேன்'' என்றார்.

என்னமா யோசிக்கிறாங்கப்பா!

- செ.சல்மான், படங்கள்: பா.காளிமுத்து