எஸ்.ராமசாமி, குட்டை தயிர்பாளையம்.

தன் மகன் ராகுலுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக சோனியா குறிப்பிட்டுள்ளாரே?

பிரதமர் பதவியையும் கடனாகக் கேட்கிறார் ராகுல். 'வந்தால் தருகிறேன்’ என்றாராம் சோனியா.

செ.அ.ஷாதலி, கோனுழாம் பள்ளம்.

1951-ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2014-ல் நடக்க இருக்கும் தேர்தலுக்கும் என்ன வித்தியாசம்?

வெளிநாட்டுக் கொள்ளையர்கள் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் நடந்த முதல் தேர்தல் அது. உள்நாட்டுக் கொள்ளையர்கள் எப்போதுதான் வீழ்த்தப்படுவார்களோ என்ற விரக்தியில் நடப்பதுதான் இந்தத் தேர்தல்.

வி.தமிழ்ப்பித்தன், நீடாமங்கலம்.

காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வர முடியாது என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் சொல்கிறார்கள். அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துவிட்டால்..?

அனுபவிக்க வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்?

மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே சொன்னது மாதிரி, 'எல்லாத்தையும் இந்த மக்கள் மறந்துவிடுவார்கள்’ என்பது உண்மை ஆகிவிடும்.

த. சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் இறுகி வருகிறதே?

நல்ல விஷயம்தான். ஆனால், கண்டுபிடிக்கப்படும் குற்றங்கள் தொடர்பான மேல்நடவடிக்கைகள் நொண்டியடிக்கிறதே. அங்கே பணம் பிடித்தோம், இங்கே பாத்திரங்கள் பிடித்தோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் செய்திகள் வருகிறதே தவிர, தேர்தலுக்குப் பிறகு எந்த வேட்பாளர் மீதாவது நடவடிக்கை பாய்ந்ததா என்றால், இல்லை. தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் இருந்து நகர்ந்து நீதிமன்றத்துக்குள் போய் ஒரு வழக்கு முடிந்து வருவதற்குள் அந்த ஐந்தாண்டு முடிந்துவிடுகிறது. என்ன நடவடிக்கை எடுத்து என்ன பயன்?

தேர்தல் வழக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறையும் தனி நீதிமன்றங்களும் அமைப்பதுதான் அதனினும் முக்கியமானது.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

இந்த தள்ளாத வயதிலும் ஓட்டுக் கேட்டு கருணாநிதி பிரசாரம் செய்வது தேவைதானா?

அவரால் வீட்டில் இருக்க முடியாது. பரபரப்பு, பதற்றம், பிரச்னைகள், நண்பர்கள், மேடைகள் இல்லாமல் அவரால் வாழ முடியாது.

உதய சூரியன் சின்னமும் கறுப்பு சிவப்பு கொடியும் கருணாநிதிக்கா வைகோவுக்கா என்று தேர்தல் ஆணையத்தில் விசாரனை நடந்துகொண்டிருந்த நேரம் அது. அன்பழகனும் ஆற்காடு வீராசாமியும் டெல்லிக்குப் புறப்படுகிறார்கள். 'சின்னமும் கொடியும் நமக்குத்தான் கிடைக்கணும் பேராசிரியர். இல்லேன்னா, என்னைப் பார்க்க முடியாது’ என்று அன்பழகன் கையைப் பிடித்துக்கொண்டு கருணாநிதி கதறினார்.

தி.மு.க. பொதுக்குழுவில் ஒருமுறை இதனைக் குறிப்பிட்ட அன்பழகன், 'இதைப் போலவெல்லாம் எனக்குப் பதற்றமோ, உணர்ச்சியோ வரவில்லை. கலைஞருக்கு மட்டும் அப்படி ஏன் வருகிறது என்றால், அவர் பிறவி அரசியல்வாதி’ என்றார். பிறவி அரசியல்வாதியால், பிரசாரம் செய்யாமல் இருக்க முடியுமா?

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

டி.என்.சேஷன், நரேஷ்குப்தா, பிரவீன்குமார் ஒப்பிடுக.

தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே சேஷன் வந்த பிறகுதான் தெரிய வந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மக்கள் மத்தியில் ஓரளவு அறிமுகப்படுத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் நரேஷ்குப்தா. இதில் மக்கள் பங்களிப்பும் அவசியம் என்று அவர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படுபவர் பிரவீன்குமார். ஆனால், முறைகேடுகளே நடக்காமல் தடுக்க இன்னொருவர்தான் வர வேண்டும் போல!

பி.எஸ்.பூவராகவன், படியூர்-1.

நடிகர் கார்த்திக் அரசியலுக்கு சரிப்படுவாரா?

எது தோற்கும் குதிரையோ அதற்குப் பணம் கட்டுபவரை என்ன சொல்வீர்கள்? காங்கிரஸுக்கு ஆதரவு என்று அவர் அறிவித்ததிலேயே தெரியவில்லையா அவரது அரசியல் ஞானம்?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

ரஜினியும் கமலும் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால், மாற்றம் கொண்டுவர முடியுமா?

இரண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் எடுக்க முயற்சிப்பதாக ஒரு இயக்குநர் சொல்லி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுவே நடக்காதபோது கட்சி எப்படி? கனவுதான்!

லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்தத் தேர்தலை சட்டசபைத் தேர்தல் மாதிரி ஆக்கிவிட்டார்கள்தானே?

சட்டசபைத் தேர்தலாக அல்ல; சாக்கடை இல்லை... குடிநீர் வரவில்லை... என்று உள்ளாட்சிப் பிரச்னையாகவே மாற்றிவிட நினைத்தார்கள். மோடியை விமர்சிக்காவிட்டால் சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக கிடைக்காது என்பதால், அவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.

நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்ற விழிப்பு உணர்வு வாக்காளர்களுக்கு வந்துவிட்டது.

'பேசும் படம்’ பிரபு, மதுரை.

வாக்காளர்களை 'வரவைத்து’ பேசுவதால் கட்சிக்கு உண்மையான பலன் கிடைக்குமா?

எல்லா இடத்திலும் கூட்டம் இருக்கிறது என்று காட்ட நினைக்கிறார்கள். இதனால், பலன் இருக்கத்தான் செய்யும். இந்தக் கூட்டம் 'வரவைக்கப்பட்ட கூட்டம்’ என்று தலைமை உணர்ந்திருந்தால் தவறு இல்லை.

கே.ராம்குமார், நுங்கம்பாக்கம்.

தேர்தல் நேரம் என்பதால் அனைவரும் நிறையப் பேசுவார்கள். அவர்களின் தொண்டையைப் பாதுகாக்கும் வழிகள் என்ன?

குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. இளம் சூடுடன் குடிநீர் பருகலாம்.

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

புதிய வாக்காளர்களின் பார்வை இந்தத் தேர்தலில் எப்படி இருக்கும்?

எதை மனதில் வைத்து ஓட்டுப்போடுவீர்கள் என்று 11,763 புதிய வாக்காளர்களிடம் ஜூ.வி. கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் 39.65 சதவிகிதம் பேர் 'பிரதமர் வேட்பாளருக்காக’ என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, புதிய வாக்காளர்களின் பார்வை ராகுல் காந்தியா, நரேந்திர மோடியா என்ற அடிப்படையில்தான் அமையும்.