சினிமாக்காரர்கள் தொடங்கி சீமான் வரை பல தரப்பினரும் தேர்தலில் தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டு பிரசாரத்தில் இறங்க, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் எண்ண ஓட்டம்தான் என்ன? அவரிடமே பேசினேன்.

''தேர்தல் களத்தில் துவக்கத்தில் இருந்து பாரதிய ஜனதாவை விமர்சிக்காத முதல்வர், தற்போது பா.ஜ.க-வும் காங்கிரஸும் காவிரிப் பிரச்னையில் துரோகம் இழைத்துவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளாரே?''

''காவிரிப் பிரச்னையில் மட்டுமல்ல. முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் இரண்டு கட்சிகளும் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதே இல்லை. கேரளா, கர்நாடகா என இரு மாநிலங்களிலும் தேசியக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. அதன் தேசியத் தலைமைகள் அந்த அரசுகள் செய்வது தவறு என்று இதுவரை கண்டித்ததும் இல்லை. அந்தக் கட்சிகளின் தமிழகக் கிளைகள் தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.''

'' 'மெட்ராஸ் கஃபே’, 'இனம்’ போன்ற படங்களில் தமிழர் விரோதக் கருத்துகள் இருப்பதாக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. 'தெனாலிராமன்’ படத்துக்குப் பிரச்னை வந்தால், படைப்பாளியின் சுதந்திரம் என்கிறார்கள். 'தலைவா’ படத்துக்குப் பிரச்னை வந்தபோது படைப்பாளியின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசவில்லையே?''

''வேண்டுமென்றே தமிழ் இனத்தையும் மொழியையும், அவமானப்படுத்தும், கொச்சைப்படுத்தும் படங்கள் வரும்போது எதிர்ப்பினை எப்படிப் பதிவுசெய்யாமல் இருப்பது? அதேநேரம் வியாபார நெருக்கடிகள், தொழில் போட்டிகளினால் படங்களுக்குப் பிரச்னைகள் வரும்போது எப்படி தமிழ் அமைப்புகள் உதவ முடியும்? அது வேறு, இது வேறு.''

''ஒருவேளை பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஈழப் பிரச்னையை எப்படி அணுகுவார்கள்?''

''காங்கிரஸ், தி.மு.க. போன்ற ஈழப் பிரச்னையில் துரோகம் இழைத்த கட்சிகளே தங்களின் தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்னையை முன்வைக்கின்றனர். முன்வைக்காத ஒரே கட்சி பா.ஜ.க. ஒன்றுதான். தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். அதை ஒரு கண்துடைப்பாகக்கூட தேர்தல் அறிக்கையில் சொல்ல முன்வராத இவர்கள், வந்த பிறகு அந்தப் பிரச்னையைத் தீர்ப்பார்கள் என்று சொல்வது நம்பக்கூடியது அல்ல.''

''ஆனால், முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவிற்கு பாரதிய ஜனதாவை நீங்கள்தானே அழைத்தீர்கள்?''

'' அதை நடத்தியது உலகத் தமிழர் பேரமைப்பு. அந்த அமைப்பின் தலைவராக நான் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அரசியலுக்கு இடம் கொடுக்கவில்லை. யாரை அழைப்பது என்று செயற்குழு கூடி முடிவு செய்தபோது, ஈழப் பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து அனைவரையும் அழைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அந்த வகையில் பா.ஜ.க-வும் கலந்துகொண்டது.''

''பாரதிய ஜனதா கூட்டணியில் திராவிடக் கட்சியான ம.தி.மு.க, காந்தியவாதி தமிழருவி மணியன் ஆதரவு, சாதிக் கட்சிகள், தே.மு.தி.க, பா.ம.க. என்று வித்தியாசமான கட்சிகள் உள்ளனவே... அவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து?''

''தமிழகத்தின் கூட்டணிகள் அனைத்தும் பதவிப் பங்கீட்டுக் கூட்டணிகள்தான். எந்த அணியும் பொது வேலைத் திட்டம் என்று ஏதாவது வைத்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை. சரி தேர்தலுக்குப் பிறகாவது இந்த அணிகள் அப்படியே நிலைக்கும் என்று சொல்ல முடியுமா என்றால்... அதுவும் இல்லை. சந்தர்ப்பவாத அரசியலுக்கு சரியான எடுத்துக்காட்டு, தமிழக அரசியல் சூழல்தான். இடதுசாரிகள் மட்டுமே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.''

''இடதுசாரிகளை இறுதி வரை காக்கவைத்து அ.தி.மு.க. கடைசியில் கழட்டிவிட்டிருக்கிறதே?''

''இந்தக் கட்டத்திலேயாவது இடதுசாரிகள் வெளிவந்து இனி திராவிடக் கட்சிகளை நாடி நிற்பது இல்லை என்று முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறேன். இதே நிலைப்பாட்டில் நின்று அடுத்த சட்டசபை தேர்தலில் முற்போக்கு சக்திகளோடு உடன்பாடுகொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்!''

- செந்தில்குமார்