Published:Updated:

நடக்குமா இது நடக்குமா?

நடக்குமா இது நடக்குமா?

நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடப்பது இருக்கட்டும். தேர்தலில் ஜெயித்து வந்தாலும், நாடாளுமன்றம் நாள் கணக்காக முடங்காமல் இருக்கணுமே! அதுக்குத்தாங்க இந்த ஐடியாமணி யோசனைகள்!

நடக்குமா இது நடக்குமா?
நடக்குமா இது நடக்குமா?

 முதலில் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாஸ்து குறையை சரிபண்ணணும். அதுக்கு இப்போ இருக்கும் பாராளுமன்றத்தின் கதவுகளையெல்லாம் அடைச்சுட்டு, ஜன்னல்களையெல்லாம் கதவுகளா மாத்திடணும்!

நடக்குமா இது நடக்குமா?

 அப்படியே நியூமராலஜிப்படி லோக் சபா என்ற பெயரை 'லைக் சபா’ என்று மாற்றி அமைக்கணும். அப்போதான் எல்லோரும் 'லைக்’ பண்ணி ஆர்வமா கூட்டத்துல கலந்துப்பாங்க!

நடக்குமா இது நடக்குமா?

 சபாநாயகரை முற்றுகையிடுவது என்பது ரொம்ப சர்வசாதாரணமான விஷயமாயிடுச்சு. அதைத் தடுக்க, சபாநாயகரோட இருக்கையை ஓரத்தில் வைக்காமல், ஒய்யாரத்தில் முதல் தளத்தில் வெச்சிடணும். எப்படி எகிறிக் குதிச்சு முற்றுகையிடுவாங்கனு பார்த்திடலாம்!

நடக்குமா இது நடக்குமா?

 நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் இருக்கையில் ஃபெவிகால் தடவி விட்டுதான் அனைவரையும் உட்காரவைக்கணும். கூட்டம் முடியும் வரைக்கும் எழவிடக் கூடாது!

நடக்குமா இது நடக்குமா?

 100 சதவிகித அட்டென்டண்ஸ் வர்றதுக்கு, தினமும் தவறாமல் நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்களுக்குக் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரலாம்!

நடக்குமா இது நடக்குமா?

 கடுமையான விவாதம் நடந்துட்டிருக்கும்போது எனக்கென்னனு சில மூத்த உறுப்பினர்கள் தூங்கிட்டு இருப்பது கேலிக்குரியதா இருக்கு. இதைத் தடுக்க, 'கிச்சுக்கிச்சு சிரிப்புப் படை’யை அறிமுகப்படுத்தலாம். தூங்கிட்டு இருக்கும் உறுப்பினர்களைக் கிச்சுக்கிச்சு மூட்டி, சிரிப்பை வரவழைக்கிறதோட, தூக்கமே வராதபடி பார்த்துக்கலாம்!

நடக்குமா இது நடக்குமா?

 குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டும் ஆவேசமா சண்டை போடுறதே தினசரி வழக்கமா வெச்சிருக்காங்க. அவங்களை மட்டும் லிஸ்ட் எடுத்து, தினமும் நாடாளுமன்றத்திற்கு அவங்களோட மனைவிமார்களையும் அழைச்சுட்டு வந்து பக்கத்திலேயே உட்காரவெச்சிடணும். அப்புறம் கப்சிப்தான்!

நடக்குமா இது நடக்குமா?

 அடிக்கடி ஒருத்தரை ஒருத்தர் நேருக்கு நேர் அடிச்சுக்கிறதும், மைக்கால மண்டையை உடைச்சுக்கிறதும்கூட நடக்குது. இதைத் தடுக்க ஒவ்வொரு உறுப்பினரோட இருக்கையையும் மைக் துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள்ள அமைக்கலாம்!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

அடுத்த கட்டுரைக்கு