இன்னுமொரு சுதந்திர தின உரை! உயர் பதவியில் உள்ளோர் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதைச் சொல்லி, ஊழலின் ஊற்றுக்கண் எங்கும் நிறைந்திருப்பது குறித்து நிறையவே வேதனை காட்டியுள்ளார் பிரதமர்.

'ஊழலை ஒழிக்க ஒற்றைத் தீர்வு ஏதும் கிடையாது. பன்முகப் பார்வையோடு பல்வேறு தளங்களிலும் போராடுவதே வழி' என்று தன் உரையில் கூறியிருக்கும் பிரதமர், உண்மையாகவே அதை முழு மனதோடுதான் கூறினாரா?

'அரசுப் பதவியும் அதிகாரமும் கொண்டு, நாட்டின் வளங்களைச் சுரண்டும் கொடுமை தொடர்கிறது' என்ற இதே கருத்தைத்தான், அண்ணா ஹஜாரே போன்றவர்களும் உரக்கச் சொல்கிறார்கள். கூடவே, 'கொள்ளை அடிப்பவர்களைத் தண்டிக்கவும், கொள்ளை போகும் மக்கள் பணத்தை மீட்கவும், அடுத்தடுத்து தவறு நடக்காமல் தடுக்கவும்கூடிய கடுமையான சட்டங்களை இயற்றுவதற்குப் பதிலாக, கொள்ளை அடிப்போருக்கு அரசே மறைமுகமாகத் துணை நிற்கிறது' என்பது ஹஜாரே போன்றவர்களின் கொதிப்பான கூடுதல் குற்றச்சாட்டு!

பிரதமர் முழக்கம் ஒலித்த மறுநாள், அதே டெல்லியில் அண்ணா ஹஜாரேவின் உண்ணாவிரதத் திட்டம்... அதற்கு காவல் துறை விதித்த கட்டுப்பாடுகள் நிச்சயம் ஒரு சுதந்திர தேசத்துக்கு உரியவை அல்ல! வெள்ளையர் ஆட்சியில், சுதந்திர வேட்கைகொண்டோர் ஒன்று கூடவோ அவரவர் கருத்துக்களை எடுத்துச் சொல்லவோ முடியாதபடி அமல்படுத்தப்பட்ட கெடுபிடிகளுக்கு ஒப்பானதுதான், இப்போது டெல்லி போலீஸ் வாயிலாக வெளியான அடக்குமுறையும்!

குடியரசுத் தலைவரும் சுதந்திர தின உரையில், 'நாட்டைப் பீடித்த புற்றுநோய்' என்று ஊழலைப்பற்றி அச்சத்தோடு பேசியிருக்கிறார். ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஆதரவு கொடுக்க இந்த அரசாங்கத்துக்கு மனம் இல்லா விட்டாலும், அவர்களை அடக்கி ஒடுக்குவதன் நோக்கம் என்ன?

மத்தியக் கிழக்கு நாடுகளின் மக்கள் புரட்சிபற்றித் தன் பேச்சில் கவலை காட்டும் பிரதமருக்கு, ஊழலும் அதற்குத் துணை நின்ற பாராமுகமும் அடக்குமுறையும்தான் அந்தப் புரட்சிக்கான வெடி மருந்து என்று தெரியாதா?