Published:Updated:

சுகாதாரத் துறைக்கு புதிதாக வானொலி..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சுகாதாரத் துறைக்கு புதிதாக வானொலி..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சுகாதாரத் துறைக்கு புதிதாக வானொலி..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

'பொது சுகாதாரம் குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் அவசர காலங்களில் தகவல்களை மக்களிடம் பரப்பவும் வானொலிச் சேவை தொடங்கப்படும்' என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில், சுகாதாரத்துறைகுறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், '108 ஆம்புலன்ஸ் சேவை வாகன ஓட்டுநர்கள் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு போன்கள் வழங்கப்படும். 108 சேவைக்குப் புதிதாக 50 வாகனங்கள் வாங்கப்படும். அவசர காலங்களில் முன்னெச்சரிக்கைத் தகவல்களை மக்களிடம் பரப்ப, வானொலி தொடங்கப்படும். அதன்மூலம், பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தகவல்கள் அளிக்கப்படும். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஏதேனும் நோய்கள் பரவும் ஆபத்து இருப்பின், அந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று விழிப்புஉணர்வு அளிக்கப்படும்' என்று தெரிவித்தார்.