Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலிலும் காங்.குடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி சூசகம்

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தலிலும்  காங்.குடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி சூசகம்
நாடாளுமன்ற தேர்தலிலும் காங்.குடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி சூசகம்
நாடாளுமன்ற தேர்தலிலும்  காங்.குடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி சூசகம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரணாப் முகர்ஜி தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார். நானும் அவருக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவித்தேன்.

குடியரசுத் தலைவர் தேர்தல் பதவியேற்பு விழாவில் திமுகவின் சார்பில் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வர்"என்றார் .

 "பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி புதிய குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,"பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேர் தூக்கு தண்டனை பற்றியும் ஏற்கெனவே திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்.

 "2014-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே வெற்றி தொடரும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டதற்கு, "நிச்சயமாக நம்புகிறேன்" என்று கூறினார் கருணாநிதி.

அவரது இந்த கூற்று நாடாளுமன்ற தேர்தலிலும்  காங்கிரஸ் உடனான  திமுகவின் கூட்டணி தொடரும் என்பதையே சூசகமாக உணர்த்துகிறது.