Published:Updated:

எனக்கு நோபல் பரிசே தரலாம்!

இது எடி வெடிஇரா.வினோத்

எனக்கு நோபல் பரிசே தரலாம்!

இது எடி வெடிஇரா.வினோத்

Published:Updated:
##~##

தவி பறிபோனாலும் படுஷோக்காகவே இருக்கிறார் முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா!

வெள்ளுடை மந்திரிகள் கூட்டம், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, கறுப்பு பூனைப் படை, காவித் தொண்டர் படை, தஞ்சாவூர் சமையல்காரர்(!)வரை... இப்போதும் அப்படியே டிட்டோ. சந்தேகமே வேண்டாம்... கர்நாடகாவின் 'நிழல்’ முதல்வரின் பேட்டிதான் இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்படி இருக்கீங்க?''

''நல்லா இருக்கேன். இப்போதான் முன்னைவிட ரொம்ப நல்லா இருக்கேன். குடும்பத்தோட அதிக நேரம் செலவிடுறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேம்ப்பா!''

எனக்கு நோபல் பரிசே தரலாம்!

''முதல்வர் பதவிக் காலம் முடிவதற் குள் உங்கள் பதவி பறிபோகும் என்று எதிர்பார்த்தீர்களா?''

''இதெல்லாம் நடக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா, இதுதான் அரசியல். இதைவிடப் பெரிய சிக்கல்கள் எல்லாம் சர்வ சாதாரணமா சமாளிச்சவன் நான். ஆனா, இந்த முறை இவ்வளவு பிரச்னை ஆகும்னு நினைச்சுப் பார்க்கலை. வாட் டு டூ தலைவரே... எல்லாம் விதி!''

''தென்னிந்தியாவில் முதல்முறையாக பாரதிய ஜனதாவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியவர் நீங்கள். ஆனால், கர்நாடகாவில் முன்னெப்போதும் இல்லாத அரசியல் கலாட்டாக்கள் உங்கள் ஆட்சிக் காலத்தில்தான் அரங்கேறி இருக்கின்றனவே?''

''எனது 40 ஆண்டு கால இடைவிடாத போராட்டம் காரணமாகத்தான் பி.ஜே.பி. கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எனது மூன்று ஆண்டு பொற்கால ஆட்சியைப் பத்தி மக்களுக்கு நல்லாவே தெரியும். எதிர்க் கட்சிகளும் மீடியாவும் கிளப்பிவிடுற வதந்தி, புரளிகளுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நான் செய்த சேவைக்காக எனக்கு நோபல் பரிசே தரலாம்... தெரியுமா?'' (சீரியஸாகத்தான் சொல்கிறார். நம்புங்கள்!)

''ஆனால், காங்கிரஸ்வாதிகளை உங்களோடு ஒப்பிட்டுப் பேசினால் அவர்கள் ஏகத்துக்கும் கோபப்படுகிறார் களே?''

''ஆமா. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். இனிமேல் யாராவது என்னை ஊழல் காங்கிரஸ்காரர்களோடு சேர்த்துப் பேசினால்,  மானநஷ்ட வழக்கு போடுவேன். காங்கிரஸ் தலைவர் சோனியாஜி, மன்மோகன்ஜி, கல்மாடிஜி, அசோக் சவான்ஜி, ஷீலா தீட்ஷித்ஜினு எல்லா காங்கிரஸ்ஜி-யும் 2ஜி ஊழல் பேர்வழிகள். இப்போ காங்கிரஸ் கட்சியின் புதுப் பெயர் தெரியுமா? கரப்ஷன் கட்சி!'' (அதிர அதிரச் சிரிக்கிறார்)

''அப்போ, உங்கள் மீது சுமத்தப்பட்ட

எனக்கு நோபல் பரிசே தரலாம்!

1,600 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு என்னதான் பதில்?''

''என் மீது லோக் ஆயுக்தா கூறிய குற்றச் சாட்டுகள் அத்தனையும் தவறானவை. கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன்... சர்க்காரின் பணத்தில் இருந்து ஐந்து பைசாகூட நான் திருடவில்லை. என் மீதும், ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆறே மாதங்களுக்குள் பொய் என நிரூபிப்பேன்!''

''நீங்கள் மஞ்சுநாதா கோயிலில் சத்தியம் செய்யாததால்தான், உங்கள் முதல்வர் பதவி பறி போனதாக குமாரசாமி சொல்கிறாரே?''

''அட... அந்த குமாரசாமி சொல்றதை எல்லாம் இன்னுமா உண்மைனு நம்புறீங்க? அவருக்கும் அவரோட அப்பாவுக்கும் யாரையாவது குறை சொல்லலைன்னா, தூக்கமே வராது. அவங்க ஒரிஜினல் கேரக்டர், நம்ம மக்களுக்கு நல்லாவே தெரியும் தலைவா!''

'' 'கருணாநிதியும் நானும் அண்ணன் தம்பி’னு  அவ்வளவு பாசம் பாராட்டிட்டு இருந்தீங்க. இப்போ நீங்க ரெண்டு பேருமே பதவியில் இல்லை. இப்போ உங்களுக்குள் உறவு எப்படி இருக்கு?''

''கலைஞர் கருணாநிதி, இந்தியாவின் மூத்த அரசியல்வாதி. அவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலைஞர்ஜியும் நானும் அண்ணன் தம்பிதான். இப்போ அவ்வளவா பேச வாய்ப்பு

எனக்கு நோபல் பரிசே தரலாம்!

கிடைக்கலை. ஆனா, அவரோட அன்புக்கு நான் என்னிக்குமே அடிமை!''

''இப்போ கர்நாடக முதல்வராக இருக்கும் சதானந்த கவுடா உங்களோட 'கைப்பொம்மை’னு சொல்றாங்களே?''

''அதெல்லாம் சும்மா... பொய்! சதானந்த கவுடா முதல்வராகப் பதவி ஏற்கும்போது, என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி யதைவெச்சு அப்படிச் சொல்றாங்க. அவருக்கு என் மேல் அளவு கடந்த மரியாதை இருக்கு... அவ்வளவுதான்.மத்தபடி அவர் விருப்பப்படிதான் ஆட்சி செய்வார். நான் யாரையும் என் அடிமை யாக வைத்துக்கொள்ள மாட்டேன். அது எல்லாம் காங்கிரஸுக்கு மட்டுமே கைவந்த கலை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism