ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

தேர்தல் வரும்போதெல்லாம் விழா கொண்டாடுவதுபோல மக்கள் உற்சாகம் அடைகிறார்களே... எதனால்?

200 முதல் 500 வரைக்கும் சும்மா யாராவது தருவார்களா? அதனால்.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

கடைசி நாள் பிரசாரக் கூட்டத்தில், 'மோடியா இந்த லேடியா என்பதுதான் போட்டி’ என்றாரே ஜெயலலிதா?

'மோடியும் இல்லை; இந்த லேடியும் இல்லை; என்னுடைய டாடிதான்’ என்றார் ஸ்டாலின். மக்கள் நினைப்பது எல்லாம், 'கேடி’களிடம் இருந்து விடுதலை ஆவதைப் பற்றித்தான்.

நல்லாத்தான் தமிழை வளர்க்கிறாங்க!

என்.காளிதாஸ், சிதம்பரம்.

ஓட்டுக்குப் பணம் அளிப்பது அதிகரித்துள்ளதே?

ஓட்டுக்குப் பணம் அளிப்பதன் மூலம் ஓர் அரசியல் கட்சி, தான் இதுவரை செய்த முறைகேடுகள் அனைத்துக்கும் மக்களையும் பங்காளி ஆக்குகிறது. பொதுமக்கள் அந்தக் கட்சியிடம் கேள்வி கேட்கும் உரிமையையும் இதன் மூலமாகப் பறிக்கிறது.

1971-ம் ஆண்டு தேர்தல் நடந்த நேரம் அது. சென்னை கடற்கரையில் தி.மு.க-வை ஆதரித்து தந்தை பெரியாரின் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது ஒருவர், 'ஊழல் செய்யும் தி.மு.க-வை நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள்?’ என்று கேள்வியாகக் கேட்டாராம். 'தி.மு.க. ஊழலே செய்யவில்லை என்று நான் எங்கும் பிரசாரம் செய்யவில்லையே?’ என்ற பெரியார், 'நீங்கள் எல்லாம் பணத்தை வாங்கிக்கொண்டுதானே ஓட்டுப் போடுகிறீர்கள்? உங்களுக்குக் கொடுத்ததை அவர்கள் எடுக்க வேண்டாமா?’ என்று சுருக்கென்று தைப்பது மாதிரி கேட்டார். ஊழலை அவர் நியாயப்படுத்தவில்லை. ஊழலுக்கு இந்த மக்களும் மறைமுக உடந்தையாகி வருவதை அன்றே சொன்னார். 1971-ல் ஊழல் லேசாக அரும்பிய காலம். 2014-ல் ஆலமரம்போல வளர்ந்து வேரூன்றிவிட்டது. மக்கள் இதனைத் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கட்சிகள் நினைக்கின்றன. அதனால்தான் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் அதிகரித்துள்ளது.

எஸ்.பி.விவேக், சேலம்.

எம்.பி. பதவியை டி.எம்.செல்வகணபதி ராஜினாமா செய்துவிட்டாரே?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதனைத்தானே சொல்கிறது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று மேல்முறையீடு செய்துள்ள ஒருவருக்கு, எதற்காக ஓர் அரசியல் கட்சி எம்.பி. பதவி தர வேண்டும்? இனியாவது இந்த கெட்ட வழக்கத்தைக் கட்சிகள் நிறுத்த வேண்டும்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

இந்தியா முழுவதும் உள்ள எதிர்ப்பு அலை எது?

ஊழலுக்கு எதிரான அலைதான் இந்தியா முழுவதும் உள்ளது.

அர்ஜுனன்.ஜி., திருப்பூர்-7.

'தமிழக சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்’ என்று ராகுல் சொல்லியிருக்கிறாரே?

ராகுலின் தைரியம் பாராட்டுக்குரியது. 'சட்டசபைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்’ என்று பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். 'இனி தனித்தன்மையுடன் இடதுசாரி இயக்கங்கள் முடிவுகள் எடுக்கும்’ என்று கம்யூனிஸ்ட் தலைவர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். தங்களது முடிவைச் சொல்ல வேண்டியது கருணாநிதியும் ஜெயலலிதாவும் மட்டும்தான்.

அவர்களும் தனித்துப் போட்டி என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தால் சட்டசபைத் தேர்தலும் பரபரப்பாக இருக்கும்.

எஸ்.வசந்தகுமார், பொள்ளாச்சி.

கூட்டணியின் முதல் இலக்கணம் என்ன?

முதலில் விட்டுக்கொடுப்பது, அப்புறம் விட்டதைப் பிடிப்பது!

சூஃபி கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. இறக்கும் தருவாயில் இருந்த ஞானி ஒருவர் தன்னுடைய மூன்று சீடர்களிடம், 'என்னிடம் 17 குதிரைகள் இருக்கின்றன. இதனை உங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார். அதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். 'மூத்த சீடருக்கு குதிரைகளில் பாதி. அடுத்த சீடருக்கு மூன்றில் ஒரு பங்கு. மூன்றாவது சீடருக்கு ஒன்பதில் ஒரு பங்கு. இந்த விகிதப்படி குதிரைகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். 17 குதிரைகளை எப்படி பாதியாகப் பங்கிடுவது, 16 இருந்தாலாவது பாதியான எட்டு குதிரைகளை மூத்தவருக்கு கொடுக்கலாம்,

இந்த ஞானி இப்படி முட்டாள்தனமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாரே என்று மூவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். தாங்கள் அறிந்த இன்னொரு ஞானியிடம் போய் இதனைச் சொன்னார்கள்.

அவர் உடனே, 'என்னிடம் உள்ள ஒரு குதிரையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். மொத்த குதிரைகளின் எண்ணிக்கை 18 ஆனது. 'மூத்த சீடருக்கு குதிரைகளில் பாதி தர வேண்டும் என்றார் உங்கள் ஞானி. அப்படிப் பார்த்தால் 9 குதிரைகளை மூத்த சீடருக்கு கொடுத்து விடுங்கள். அடுத்த சீடருக்கு மூன்றில் ஒரு பங்கு தர வேண்டும். 18-ல் மூன்றில் ஒரு பங்கு என்றால் 6 குதிரைகள். அவற்றை இரண்டாவது சீடருக்கு தந்துவிடுங்கள். மூன்றாவது சீடருக்கு ஒன்பதில் ஒரு பங்கு என்றால் 2. அவருக்கு 2 குதிரையை கொடுங்கள்.

மூத்தவருக்கு 9, இரண்டாம் சீடருக்கு 6, மூன்றாம் சீடருக்கு 2, ஆக மொத்தம் 17 குதிரைகளை பிரித்துவிட்டோம். மீதி ஒரு குதிரை இருக்கிறது. அது, நீங்கள் எனக்குத் தர வேண்டிய குதிரை. அதனை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றாராம்.

'விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவது இல்லை, கெட்டுப்போனவர் விட்டுக்கொடுத்தது இல்லை’ என்பதே அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டிய கூட்டணி தர்மம்.

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'மோடியை விமர்சிப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும்’ என்று பி.ஜே.பி. மூத்த தலைவர் கிரிராஜ் சிங் கூறியது சரியா?

மோடியை விமர்சிப்பவர்கள் என்றால் அதில் அத்வானி, ஜோஷி, சுஷ்மா, ஜெட்லி ஆகியோரும்தானே அடக்கம். அவர்களை நேரடியாகச் சொல்ல முடியாதவர், இப்படி மறைமுகமாக மிரட்டுகிறாரோ... என்னவோ?

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

மோடி- லேடி ரைமிங் சூப்பரா இருக்கே?

ஆனா, டைமிங் தப்பா இருக்கே! பிரசாரத்தின் தொடக்கத்திலேயே இதைச் செய்திருந்தால் சிறுபான்மையினர் வாக்கை முழுமையாகத் தனக்குத் திரட்டி இருக்க முடியும். ஆனால், அவர்கள் மொத்தமாக தி.மு.க. பக்கமாகப் போன பிறகு, அவர்களை திருப்பிக் கொண்டுவருவதற்காகச் சொன்னது பலிக்கவில்லையே. தவ்ஹித் ஜமாத்தைக்கூட தக்கவைக்க முடியவில்லையே!