Published:Updated:

என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்: செங்கோட்டையன்

Vikatan Correspondent
என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்: செங்கோட்டையன்
என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்: செங்கோட்டையன்
என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்: செங்கோட்டையன்

கோபி: அனுமார் நெஞ்சில் சீதை இருப்பதுபோல், என் நெஞ்சை பிளந்தால் முதலமைச்சர் ஜெயலலிதா இருப்பார் என்று அண்மையில் பதவி பறிக்கப்பட்ட அதிமுக முன்னாள்  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற கம்பன் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய  அவர்,"தமிழக மக்களுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல திட்டங்களை  செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறார்.தமிழக மக்கள் எல்லா சலுகைகள் பெற்று  மகிழ்ச்சியுடன் உள்ளனர்.கம்பன் பெருமைகளை நான் சொல்ல வேண்டியதில்லை  எல்லோருக்கும் தெரியும்.ராமாயணத்தில் ராமனுக்கு பல்வேறு சோதனைகள் வந்துள்ளது.
 
சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது ராமர், அனுமாரை சீதாவிடம் தூதுவனாக  அனுப்பி வைத்தார்.அப்போது அனுமாரிடம், சீதா, ராமர்தான் அனுப்பி வைத்தார்  என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டாள்.உடனே அனுமார் ராமன் கொடுத்த  கணையாழியை காண்பித்தார்.மேலும் அவரது நெஞ்சை பிளந்தார்; அதில் ராமர்  தெரிந்தார்.
 
அதேபோல் என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அதில் முதலமைச்சர் ஜெயலலிதாதான்  தெரிவார் (இவ்வாறு அவர் கூறியதும் அவரது கண்களில் கண்ணீர் ததும்பியது).இந்த  விழாவுக்கு என்னை அழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.