Published:Updated:

பிக் பாஸில் கலந்துகொள்ள மறுத்த நிர்மலா பெரியசாமி!

பிக் பாஸில் கலந்துகொள்ள மறுத்த நிர்மலா பெரியசாமி!
பிக் பாஸில் கலந்துகொள்ள மறுத்த நிர்மலா பெரியசாமி!

ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டு, பல அணிகளாகப் பிரிந்த பிறகு, ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். நியூஸ் சேனல்களின் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர், நண்பர்களுடன் விவாதிக்கும்போது நட்புக்குள் விரிசல் விழக்கூடாதென தற்போது விவாத நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். கூடவே, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தன் மகன் திருமணத்திலும் பிஸியாக இருக்கிறார். 

தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி பலமுறை பேசியிருக்கிறார்கள். மனதில்பட்டதை தைரியமாக, தெளிவாகப் பேசுகிறீர்கள், உங்களை மாதிரி ஒரு ஆள் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கும் என பலமுறைப் பேசிப்பார்த்தும், நல்ல தொகை கொடுப்பதாகச் சொன்னபோதும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் நிர்மலா பெரியசாமி. வட இந்தியாவில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி அந்த கலாசாரத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டுப் போகலாம். நம் கலாசாரத்துக்கு இது சரியாக வராது. மேலும், இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப் போகிறீர்கள் எனத் தெரியவில்லை' என மறுத்துவிட்டாராம்.