Published:Updated:

அப்சல் கருணை மனு: பிரணாப் கருத்து

Vikatan Correspondent
அப்சல் கருணை மனு: பிரணாப் கருத்து
அப்சல் கருணை மனு: பிரணாப் கருத்து
அப்சல் கருணை மனு: பிரணாப் கருத்து

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதலுக்கு உதவிய குற்றத்துக்காக தூக்கு தண்டனை  பெற்றுள்ள அப்சல் குருவின கருணை மனுவை தீர ஆராய்ந்த பின்னரே அது குறித்து தாம்  முடிவெடுக்க முடியும் என்று நாட்டின் 13 வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள  பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

அப்சல் குருவின கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர்  பால் தாக்கரே, பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆங்கில் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டி அளித்த பிரணாப்பிடம்  இது குறித்து கேட்டபோது, குடியரசுத் தலைவராக பதவியேற்று அலுவலகம் சென்று,  அப்சல் குருவின் வழக்கை தீர ஆராய்ந்த பிறகே இது குறித்து பதிலளிக்க முடியும் என்று  கூறியுத்ள்ளார்.