Published:Updated:

'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை' - அமைச்சர் எம்.சி.சம்பத்

'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை' என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி தராது என்ற நிலைபாட்டை வரவேற்கிறோம். அனால், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாதத்தை அரசு பெற்றுத் தருமா?' என்று கேட்டார்.

இதுதொடர்பாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'பிரதமரைச் சந்தித்தபோது, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுத்துவருகிறோம்', என்றார்.

பின்னர் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசு அழுத்தம் தந்தாலும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை', என்றார்.

அடுத்த கட்டுரைக்கு