Published:Updated:

தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ. கடிதம்!

Vikatan Correspondent
தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ. கடிதம்!
தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ. கடிதம்!
தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ. கடிதம்!

சென்னை:  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிப்பதற்கு, உடனடியாக நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக தாங்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த பகுதிகளில்தான்  மீன் பிடித்து வருவதாகவும்,எனவே எதிர்காலத்தில் தமிழக மீனவர்களை கைது  செய்யாமல் இருக்குமாறு இலங்கை அரசு அதன் கடற்படையினரை அறிவுறுத்துமாறு  கேட்டுக்கொள்ளவேண்டும் என்றும் தமது கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்பிரச்னையில் இந்திய அரசு தலையிடாதவரை இதுபோன்ற செயல்கள் வருகிற  மாதங்களிலும் தொடரத்தான் செய்யும் என்றும் தமது கடிதத்தில் ஜெயலலிதா  கூறியுள்ளார்.