Published:Updated:

பிரணாப் பதவியேற்கும் நாளில் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம்: ஹசாரே குழு

Vikatan Correspondent
பிரணாப் பதவியேற்கும் நாளில் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம்: ஹசாரே குழு
பிரணாப் பதவியேற்கும் நாளில் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம்: ஹசாரே குழு
பிரணாப் பதவியேற்கும் நாளில் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவோம்: ஹசாரே குழு

புதுடெல்லி:  இந்திய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்கும் வருகிற 25 ஆம்  தேதியன்று அவருக்கு எதிரான ஊழல் புகார்களை ஆதாரத்துடன் வெளியிடுவோம் என்று  அன்னா ஹசாரே குழு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அக்குழுவை சேர்ந்த அரவிந்த்  கெஜ்ரிவால்,”ஏற்கனவே ஊழல் புகார் உடைய மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்  போது தற்போது ஊழல் புகார் உடைய பிரணாப் முகர்ஜி இந்திய ஜனாதிபதி ஆவது  வருத்தத்திற்கு உரியது.

எங்களுக்கு அரசு மீது உள்ள நம்பிக்கை முழுவதுமாக போய் விட்டது. பிரணாப்  முகர்ஜிக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வரும் 25 ம் தேதி ஜந்தர் மந்தரில் நாங்கள்  மேற்கொள்ளவிருக்கும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது  வெளியிடுவோம்.

எங்களது கோரிக்கையை ஏற்று அரசு நல்ல முடிவு எடுக்காத வரை எங்களது  உண்ணாவிரதப் போராட்டம் முடிவடையாது” என்று மேலும் கூறினார்.