Published:Updated:

ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்!

ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்!

ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்!

ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்!

ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்!

Published:Updated:
ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்!

கோவை மாநகர் சிங்காநல்லூரில் சாந்தி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. கோவை -  உதகை சாலையில் உள்ள துடியலூர் மற்றொரு புறநகர் பகுதி. துடியலூரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சிங்காநல்லூர் சாந்தி பங்கிற்கு வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்லும் வாகன ஓட்டிகளை கோவையில் பார்க்க முடியும். கோவை மக்களிடையே 'சாந்தி' என்கிற பெயருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு நற்பெயர். புகழ்பெற்ற சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் இது. இதன் அருகிலேயே செயல்படுகிறது சாந்தி கேன்டீன்.

'அம்மா ' உணவகத்துக்கு முன், கோவைவாசிகளுக்கு கிடைத்த 'அட்சய பாத்திரம்' என்றே இந்தக் கேன்டீனை சொல்லலாம். காலையில் இட்லி, சப்பாத்தி, வடை மலிவு விலையில் கிடைக்கும். மதியம் கூட்டு , பொறியல், வடை, அப்பளம், பழம் என 13 வகை கூட்டுகளுடன்  'சரவண பவன்'  ரேஞ்சுக்கு 'லஞ்ச்' கிடைக்கிறது.  ' இன்று என்ன ஸ்பெஷல்' என்பதும் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். உங்கள் வயிறு நிரம்பாமல் போனால் மட்டுமே சாந்தி கேன்டீன் வருத்தப்படும். விலையோ வெறும் 25 ரூபாய்தான். வாடிக்கையாளர்களுக்கு ராஜ சாப்பாடு வழங்கி, அதற்கான ஜி.எஸ்.டி வரியையும் இந்த கேன்டீனே செலுத்துகிறது என்பதுதான் இப்போதையை ஆச்சரியத் தகவல்.  கோவை நகரில்  பத்து ரூபாய்க்கு டீ கூட குடிக்க முடியாது. இந்தக் கேன்டீனிலோ  ஃபில்டர் காபியின் விலையே 5 ரூபாய்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜி.எஸ்.டி வரி  அமலுக்கு வந்ததும் ஹோட்டல்களில் 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் ரூ. 128 பில் கட்ட வேண்டியதிருக்கிறது. 

பிரச்னை என்னவென்றால், ஜி.எஸ்.டி வரியைக் காரணம் காட்டி குடிநீர் கேன் சப்ளை செய்பவர்கள் கூட 5 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளனர். இவர்கள் எந்த பில்லும் கொடுப்பதில்லை. நாமும் பில் பற்றி யோசிப்பதும் இல்லை. இதைப்போலவே பல ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி என்ற பெயரில் தாறுமாறாக பில் ஏற்றுகின்றனர். அத்தியாவசியப் பொருட்களில் அரிசி, காய்கறிக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை. சில பொருட்களுக்கு 5,12,18,28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 

சர்க்கரை, பால், இன்ஸ்டன்ட் காபி, டீ போன்றவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்களில் காபிக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறார்கள். ஹோட்டலில் பொங்கல், காபி சாப்பிடுகிறீர்கள் என்றால், மொத்த பில் 88.50 வருகிறது என்றால், அந்த 88.50 ருபாய்க்கு 18 சதவிகித வரி விதிக்கிறார்கள் காபிக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிதானே விதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லாததால், பில்லை சரிபார்க்காமலேயே செலுத்தி விடுகின்றனர். ஆனால், சாந்தி கேன்டீனைப் பொறுத்தவரை, எந்த பொருளுக்கு என்ன ஜிஎஸ்டி வரியோ... அதை மட்டும் பில்லில் சரியாக காட்டி, வாடிக்கையாளர்கள் சார்பில் அரசுக்கு செலுத்தப்படுகிறது. 

இங்கு, சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பண்டத்துக்கும் அதற்கான சி. ஜி.எஸ்,டி வரியும் எஸ்.ஜி.எஸ்.டி வரியும் தனித் தனியாக பிரித்துக் காட்டப்படுகிறது. ‘ஒரு குடும்பத்தின் மொத்த பில் ரூ.110  ஆகியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 3 கிச்சடி விலை ரூ.30, வெண்பொங்கல் ஒன்றின் விலை ரூ.10 , சப்பாத்தி ஒரு செட் ரூ.20,புளி சாதம் ரூ.10 ,ராகி பால் 3 ரூ.15,  ராகி தோசை ரூ.10, பில்டர் காபி ரூ.5 ஆக மொத்தம் 110 பில் வருகிறது. அதில், கிச்சடியில் இருந்து காபி வரை ஜிஎஸ்டி வரி தனித்தனியாக பிரித்துக் காட்டப்படுகிறது. வாடிக்கையாளர் பில் தொகை 110 மட்டும் கட்டினால்  போதுமானது. ஜி.எஸ்.டி வரியை கேன்டீன் நிர்வாகமே செலுத்துகிறது.

பல கடைகளில் என்ன பொருளுக்கு ஜி.எஸ்.டி வரி எவ்வளவு என்பதையும் பார்க்காமல் வாங்கி விடுகிறோம். மொத்த பில்லுக்குமாகச் சேர்த்து 18, 28 சதவிகிதம் என ஜி.எஸ்.டி வரியைச் செலுத்துகிறோம். தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி வரி என்ன என்பதை நிறுவனங்கள் காட்ட முன்வருவதில்லை. இதுகுறித்த, விழிப்பு உணர்வு வாடிக்கையாளர்களுக்குத் தேவை!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism