Published:Updated:

அரசுடன் கருத்து மாறுபாடு கொள்ள சட்டத்தில் இடமுள்ளது: பிரணாப்

Vikatan Correspondent
அரசுடன் கருத்து மாறுபாடு கொள்ள சட்டத்தில் இடமுள்ளது:  பிரணாப்
அரசுடன் கருத்து மாறுபாடு கொள்ள சட்டத்தில் இடமுள்ளது: பிரணாப்
அரசுடன் கருத்து மாறுபாடு கொள்ள சட்டத்தில் இடமுள்ளது:  பிரணாப்

புதுடெல்லி: குடியரசுத் தலைவருக்கு அரசுடன் கருத்து மாறுபாடு கொள்ள, இந்திய  அரசியல் சட்டத்தில் இடமிருப்பதாககவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

நாட்டின் 13 வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜி,ஆங்கில செய்தி  சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,குடியரசுத் தலைவர் நாட்டை ஆளும் அரசுடன்  கருத்து மாறுபாடு கொள்ள, இந்திய அரசியல் சட்டத்தில் இடமிருப்பதாக கூறினார்.

மேலும் அரசியல்வாதிகள் நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது ஒன்றும்  புதியதல்ல என்றும் அப்பேட்டியில் தெரிவித்துள்ள அவர்,தமது பதவி ஏற்பு நிகழ்ச்சியில்  மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளது, தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், அரசியலில்  மறப்போம் மன்னிப்போம் என்பதே நடைமுறையாக இருக்க வேண்டும் என்றும் பிரணாப்  முகர்ஜி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தாக்குதலுக்கு உதவிய குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல்  குருவின கருணை மனுவை தீர ஆராய்ந்த பின்னரே அது குறித்து தாம் முடிவெடுக்க  முடியும் என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பிரணாப் தெரிவித்தார்.

அப்சல் குருவின கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர்  பால் தாக்கரே, பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.