Published:Updated:

'ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம்'- ராட்சத கிணற்றை முற்றுகையிட்ட கிராமமக்கள் ஆவேசம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம்'- ராட்சத கிணற்றை முற்றுகையிட்ட கிராமமக்கள் ஆவேசம்
'ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம்'- ராட்சத கிணற்றை முற்றுகையிட்ட கிராமமக்கள் ஆவேசம்

'ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம்'- ராட்சத கிணற்றை முற்றுகையிட்ட கிராமமக்கள் ஆவேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் உள்ள கிணறுகளை உடனடியாக மூட வலியுறுத்தி தோட்டத்தைக் கிராம மக்கள் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பிரச்னைக்காகப் போராடிவருகிறார்கள். அவர்களில், குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஊர்ப் பொதுக்கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதற்கு அந்தக் கிணற்றில் அருகில் இருக்கும் ஒரு தனியார் தோட்டத்தில் தோண்டப்பட்ட மூன்று ராட்சத கிணறுதான் என்றும், அந்தத் தோட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி பெயரில் இருப்பதாகவும் ஜூனியர் விகடன் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த மூன்று கிணற்றில் இரண்டு கிணற்றை ஊர் மக்களுக்கு எழுதிவைக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்ததையும் நாம் பதிவுசெய்திருந்தோம். இந்நிலையில், லெட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் அதிகரித்ததைத் தொடர்ந்து பொறுமையிழந்த கிராம மக்கள் இன்று ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்துக்குப் படையெடுத்தனர். அங்கே வந்த கிராமமக்கள் அங்கிருந்த ராட்சத கிணற்றை முற்றுகையிட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கிணற்றையும் கிணற்றுத் தண்ணீரையும் மீட்காமல் போக மாட்டோம் என்று கூறினர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மக்களைக் கலைந்துசெல்லுமாறு கூறினர். ஆனால், அவர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால், போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்களைப் பிடித்து கீழே தள்ளினர். குழந்தைகளோடு வந்த பெண்கள் போலீஸாரின் நடவடிக்கையால் சிரமப்பட்டனர். லெட்சுமிபுரம் கிராமத் தலைவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராமபெண்கள் கூறுகையில், "தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. குளிக்க தண்ணீர் இல்லையென்றால்கூட பரவாயில்லை, குடிக்க தண்ணீர் இல்லை. எத்தனை முறைதான் நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் சொல்லிக்கொண்டே இருப்பது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கிணறு இருக்கும் இடத்தை ஆய்வு செய்தார்கள். அந்தக் கிணறு விவசாயத்துக்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாயை மறைத்து போடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்படி இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம். அவர் உடனே இங்கு வர வேண்டும். எங்கள் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். தண்ணீர் இல்லாமல் லெட்சுமிபுரம் கிராமத்தை ஓ.பன்னீர்செல்வம் கொன்றுவிட்டார் என்று எழுதிக்கொள்ளுங்கள். அதுதான் நடக்கப்போகிறது" என்று கண்ணீரோடு பேசினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு