Published:Updated:

மகாராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு எதிராக 62 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!

Vikatan Correspondent
மகாராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு எதிராக  62 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!
மகாராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு எதிராக 62 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!
மகாராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு எதிராக  62 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர்  பிருத்விராஜ் சவானுக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 62  எம்.எல்.ஏ.க்கள் போர் கொடி உயர்த்தியுள்ளது, அம்மாநில அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்  உள்ளது.இந்நிலையில் முதல்வர் சவானுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி சமீப  காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மீது ஊழல்  குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவர்களை பாதுகாக்கும் விதத்தில் சவான்  செயல்படவில்லை என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு.

குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மருமகனும்,நீர்ப்பாசனத்துறை  அமைச்சராக இருந்தவருமான அஜித் பவார் மீது நீர்ப்பாசனத் திட்டங்களில் ஊழல்  புரிந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து இது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர்  சவான் அறிவித்தது.இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அதே துறையின் தற்போதைய அமைச்சரான தேசியவாத காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த சுனில் தாக்கரேவின் செயல்பாடுகளும் ஆய்வில் உள்ளது.இதனால் ஏற்பட்ட  அதிருப்தி காரணமாகத்தான், சவானுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் குரல்  எழுப்பியது.

மத்தியில் காங்கிரஸ் உடனான கூட்டணியிலிருந்து விலகலாமா என்று தேசியவாத  காங்கிரஸ் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் ஆலோசனைக்கு,சவானும் ஒரு  காரணம் என்ற அளவிற்கு நிலைமை சிக்கலாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 62 எம்.எல்.ஏ.க்கள்,  சவானுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியுள்ளது,சவானுக்கும், காங்கிரஸ் மேலிடத்திற்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி கொள்கைகளுக்கு ஏற்ப முதல்வர் சவானின் செயல்பாடுகள் இல்லை என்று சவான்  மீது புகார் கூறி மாநில காங்கிரஸ் தலைவருக்கு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்  எழுதியுள்ளனர்.

இதனால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியடைந்துள்ளது.