Published:Updated:

பிரணாப்பின் எம்.பி. தொகுதியை கோருகிறார் மகன்!

Vikatan Correspondent
பிரணாப்பின் எம்.பி. தொகுதியை கோருகிறார் மகன்!
பிரணாப்பின் எம்.பி. தொகுதியை கோருகிறார் மகன்!
பிரணாப்பின் எம்.பி. தொகுதியை கோருகிறார் மகன்!

புதுடெல்லி: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானதால்,அவர் வகித்த எம்.பி. பதவிக்கான  தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி, காங்கிரஸ்  கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் முக்கிய இடம் வகித்து வந்த பிரணாப் முகர்ஜி, பதவியை  ராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரணாப்  முகர்ஜி வகித்து வந்த எம்.பி. இருக்கை காலியாக உள்ளது.

பிரணாப் ராஜினாமா செய்த ஜங்கிப்பூர் எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற  உள்ள நிலையில்,அதற்கான ’சீட்’டை பெறுவதில் காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி  எழுந்துள்ளது.

இந்நிலையில் தாம் அங்கு போட்டியிட  வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிரணாப்  முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.