Published:Updated:

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியின் காவல் நீட்டிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தடையை மீறி இந்நிகழ்ச்சியை நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நான்கு பேரும், குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் திருமுருகன் காந்தி உட்பட நால்வரும் இன்று எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் நால்வரையும் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, ''தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அணை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டால், முல்லைப் பெரியாறு உட்பட மூன்று அணைகளின் உரிமையைத் தமிழகம் இழக்க நேரிடும்'' என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு