Published:Updated:

நிதிஷ்குமார் மீது பி.ஜே.பி-யின் திடீர் கரிசனத்துக்குக் காரணம் இதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிதிஷ்குமார் மீது பி.ஜே.பி-யின்  திடீர் கரிசனத்துக்குக் காரணம் இதுதான்!
நிதிஷ்குமார் மீது பி.ஜே.பி-யின் திடீர் கரிசனத்துக்குக் காரணம் இதுதான்!

நிதிஷ்குமார் மீது பி.ஜே.பி-யின் திடீர் கரிசனத்துக்குக் காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பீகார் அரசியலில் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. குடியரசுத் தலைவர் பதவிக்கு பி.ஜே.பி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்ததில் இருந்துதான் பிரச்னை தொடங்கியது. இதற்கிடையே, ஊழல் வழக்கு தொடர்பாக லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 7-ம் தேதி சி.பி.ஐ ரெய்டு நடத்தியது.

எனவே, நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிதிஷ்குமாருக்கு பி.ஜே.பி சார்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் பெயர் இருக்கிறது என்பதற்காக தேஜஸ்வி ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று லல்லு பிரசாத் தரப்பில் சொல்கின்றனர்.


இந்தப் பிரச்னைகள் காரணமாக, நிதிஷ்குமாருக்கு அளித்து வரும் ஆதரவை லல்லு பிரசாத் யாதவ் விலக்கிக் கொள்ளக்கூடும் என்று தகவல்கள் பரவுகின்றன. இந்த சூழலில்தான், "நிதிஷ்குமார் அரசுக்கு பி.ஜே.பி ஆதரவு தெரிவிக்கும்" என்று பீகார் பி.ஜே.பி தலைவர் நித்யானந்த் ராய் கூறி இருக்கிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு