Published:Updated:

பாரபட்சமற்ற ஜனாதிபதியாக பணியாற்றுவேன்: பிரணாப்

பாரபட்சமற்ற ஜனாதிபதியாக பணியாற்றுவேன்: பிரணாப்
பாரபட்சமற்ற ஜனாதிபதியாக பணியாற்றுவேன்: பிரணாப்

புதுடெல்லி: நாட்டின் 13 வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி  ஆற்றிய தனது முதல் உரையில், அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் வகையில் பாரபட்சமற்ற  ஜனாதிபதியாக பணியாற்றுவேன் எனக்  கூறினார்.

பாரபட்சமற்ற ஜனாதிபதியாக பணியாற்றுவேன்: பிரணாப்

வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாது உண்மையிலேயே தாம் அவ்வாறு செயல்படப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த தாம், நாட்டின் தலைமை  பீடத்தில் அமர்ந்திருப்பது குறித்த மிக்க மகிழ்ச்சி அடைவதாக கூறிய பிரணாப்,ஏழைகளும்  இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர்,  மேலும் பேசுகையில்,"நாட்டு நலனிற்காக விருப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன்.  அரசியல் சாசனத்தை காக்க உறுதி கொண்டுள்ளேன்.நாட்டிலிருந்து வறுமையை  முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களோடு இணைந்து மேற்கொள்வேன்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதே ஜனாதிபதி அலுவலகத்தின் நோக்கத்தை  முழுமூச்சாக கொண்டு நிறைவேற்றுவேன்.பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான  நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேன்.

ஏழைகளும் இந்நாட்டின் அங்கம் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றுவேன்.  மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவேன். இனம்,  மதம் மற்றும் ‌மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை களைவேன்.நாட்டின்  இறையாண்மையை காப்பேன்.எனது எண்ணங்களை பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும்  காட்டுவேன் என்றார்.