முருகானந்தம், சாத்தூர்.

அவமானங்களை எப்படித் தாங்குவது?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னது நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் அவரது சினிமா போஸ்டர் மீதுதான் அதிக அளவில் சாணி அடிக்கப்பட்டது. நடிப்புக்குள் அரசியலும் புகுந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் ஒரு உர நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு சிவாஜியை அழைத்தார்கள். மைக் பிடித்த சிவாஜி, 'இந்த கம்பெனியை திறந்து வைக்கும் தகுதி தமிழகத்தில் என்னைத் தவிர யாருக்குமே கிடையாது. அதிகப்படியான அளவு சாணியை போஸ்டரில் தாங்கித்தாங்கி உரம் பெற்ற உடல் இது. அந்த அவமானங்கள்தான் என்னை மாபெரும் நடிகனாக மாற்றியது. அதற்குமுன் ஒரு சில நாட்களாவது ஓய்வு எடுப்பேன். சோம்பேறியாய் வீட்டில் இருப்பேன். ஆனால், இந்த அவமானங்கள் வரவர வீட்டிலேயே இருக்காமல் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டே இருந்தேன்’ என்று சொன்னார். அப்படி அவமானங்களை உங்களை உற்சாகப்படுத்தும் தூண்டுகோல்களாகக் கொள்ளுங்கள்.

'புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொருமுறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்’ என்றார் ஹிட்லர். சொன்னவரை பார்க்காதீர்கள். சொன்னதைப் பாருங்கள்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

முல்லை பெரியாறு தீர்ப்பை வரவேற்றுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், 'முல்லை பெரியாறு அணையின் பலம் பற்றி யாரும் சந்தேகப்படத் தேவை இல்லை’ என்று சொல்லியிருக்கிறாரே?

உச்ச நீதிமன்ற நீதிபதி இருக்கையில் இருந்தபோதும் அதில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் நீதித் துறை மாண்பைப் காப்பாற்றும் மனிதர்களில் ஒருவராக மாண்புமிகு கே.டி.தாமஸ் இருக்கிறார். அதை பல்வேறு முக்கியமான விவகாரங்களில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகளின் மூலமாக வெளிப்படுத்தியும் வருகிறார்.

கலைஞர் ப்ரியா, வேலூர்( நாமக்கல்).

ரொம்ப ஓவராகப் பேசியது மோடியா... பிரியங்காவா... ராகுலா?

முகம் சுளிக்கவைக்கும் விதத்தில் மூவரும்தான் பேசினார்கள்.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

நரேந்திர மோடி விவகாரத்தில் இவ்வளவு காலமாக இல்லாத சாதிப் பிரச்னை திடீரென எப்படி கிளம்பியது?

அது அவசியமே இல்லாமல், நரேந்திர மோடி கிளப்பியதுதான். பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக, 'நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான் என்னை விமர்சிக்கிறார்கள்’ என்று அனுதாபம் அள்ளப் பார்த்தார். நம்மூரில்தான் இப்படி நிறைய பார்த்திருக்கிறோமே.

'மிக மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான் என்னை எல்லோரும்

விமர்சிக்கிறார்கள்’ என்று கருணாநிதியும், 'பெண் என்பதற்காக என்னைப் பழிவாங்குகிறார்கள்’ என்று ஜெயலலிதாவும் சொல்லியதை நம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

காந்திலெனின், திருச்சி.

தமிழறிஞர் கால்டுவெல் பற்றி?

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக அவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆங்கில நூல் தமிழ் மொழிக்கும் அதன் திராவிடக் குடும்பமான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்குமான உறவை உலகுக்குச் சொன்னது. அதனால்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கால்டுவெல்லையும் மலையாள மொழியை ஆய்வுசெய்த டாக்டர் குண்டட் ஆகிய இருவரையும், 'அவர்களுக்கு திராவிடம் கடன்பட்டுள்ளது’ என்று சொன்னார்.

நற்கருணை தியான மாலை, தாமரைத் தடாகம், நற்கருணை, பரதகண்ட புராதனம் ஆகிய நூல்களை தமிழில் எழுதும் அளவுக்கு தமிழைக் கசடறக் கற்றவர். கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகச் சென்னை வந்தார். கிறிஸ்துவம் கற்பிக்கவே தமிழ் படித்தார். அதன் பிறகு தமிழ் அவரை விடவில்லை. எங்கு போனாலும் நடந்தே போகும் பழக்கம் வைத்திருந்தார். சென்னையில் இருந்து நெல்லை வரை பல்வேறு ஊர்கள் வழியாக நடந்துபோய் தமிழ்நாட்டு மக்களை படித்தவர் அவர். ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான தொப்புள் கொடி உறவை முதலில் சொன்னவரும் கால்டுவெல்லே!

குலசை. க.மீ.நஜ்முதீன், காயல்பட்டினம்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இழுக்கப்பட்டு வருகிறதே... இது எதில் போய் முடியும்?

நியாயமான தீர்ப்பில் முடிய வேண்டும்.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

நாட்டுக்கே உதாரணமாக இருக்க வேண்டிய முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடாதது பற்றி?

அரசியல் அபிலாசைகள் அண்டாத மனிதர் கள் உட்கார வேண்டிய பதவி. அதனால், அந்த நாற்காலியில் இருப்பவர்கள் வாக்களிக்காமல் இருப்பதுகூடத் தவறு அல்ல.

பி.எஸ்.பூவராகவன், படியூர்.

இனவெறி, மதவெறி - எது ஆபத்தானது?

எதுவுமே அடுத்தவர் மீதான வெறுப்பாக மாறும்போது ஆபத்தாக மாறுகிறது. சொந்த இனத்தின் பெருமை பேசுவதும் பின்பற்றும் மதத்தின் நம்பிக்கையைப் போற்றுவதும் தவறு அல்ல. ஆனால், அடுத்த இனத்தவரை இழிவுப்படுத்துவதும் அடுத்த மதத்தவர் உணர்வுகளைப் புண்படுத்துவதும்தான் ஆபத்தானது. எந்த ஒன்றின் மீதான வெறியுமே ஆபத்து ஆனதுதான்.

எஸ்.பி.விவேக், சேலம்.

தமிழ் இலக்கியப் பேச்சாளர்களில் யாருடைய பேச்சு மிகவும் ரசிக்கும்படி இருக்கும்?

வள்ளுவத்தை இரா.இளங்குமரனாரும், சிலப்பதிகாரத்தை சிலம்பொலி செல்லப்பனும், சமய இலக்கியங்களை இலங்கை ஜெயராஜும், வள்ளலாரை பழ.கருப்பையாவும், இதிகாசங்களை இளம்பிறை மணிமாறனும், பாரதியை பாரதி கிருஷ்ணகுமாரும், கண்ணதாசனை தமிழருவி மணியனும் பேசினால்... ரசிப்பது மட்டுமல்ல, பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு பிறக்கும்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்த பிரதமர் கனவு மு.க.ஸ்டாலினுக்கு எப்போது வரும்?

ஏனப்பா அவரது வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்கள். அவரது முதலமைச்சர் கனவை கருணாநிதி அடுத்த முறையாவது நிறைவேற அனுமதிப்பாரா எனத் தெரியவில்லை. அந்தக் கனவு நிறைவேறினால்தானே அடுத்த கனவு?

ஜெயலலிதா பிரதமர் என்றால், மூன்று முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து சலித்துவிட்டார். அல்லது, அவரது சிந்தனைப்படி சாதித்து முடித்துவிட்டார். அதனால் டெல்லிக்கு போக, அதைவிட உயர்ந்த பதவியில் உட்கார ஆசைப்படுகிறார். ஆனால் ஸ்டாலினுக்கு எல்லாமே இனிமேல்தானே?