Published:Updated:

'அமர்நாத் சம்பவம் மோடி அரசுக்குக் கிடைத்த தோல்வி!' - பிரவீன் தொக்காடியா ஆவேசம்

’அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட சம்பவம், மோடி அரசுக்குக் கிடைத்த தோல்வி’ என விஸ்வஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் பிரவீன் தொக்காடியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மோடி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட முடியவில்லை. காஷ்மீர் அரசிடமிருந்து அமர்நாத் பள்ளத்தாக்குப் பகுதியின் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதிகள் மீது கருணை காட்டவேகூடாது. இந்துக்கள், இந்த நாட்டில் பாதுகாப்பாக யாத்திரைகூட செல்ல முடியவில்லை. அதற்குக் காரணமான முஃப்தி மெகபூபா அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். 125 கோடி மக்களில் திறமை வாய்ந்த ஒரு ராணுவ அமைச்சர்கூட இல்லையா? 

அமர்நாத் சம்பவம் மோடி அரசுக்கு கிடைத்த தோல்வி. யாத்ரீகர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், இந்த அரசுக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் கருத வேண்டியது இருக்கிறது. அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். அமர்நாத் பள்ளத்தாக்கில் ராணுவத்தினர் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதியளிப்பதோடு, காஷ்மீரில் முஃப்தி மெகபூபாவின் அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி அளித்துவரும் ஆதரவையும் விலக்கிக்கொள்ள வேண்டும்'' என்றார்

அடுத்த கட்டுரைக்கு