Published:Updated:

நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கிலிடுங்கள்: மோடி ஆவேசம்!

நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கிலிடுங்கள்: மோடி ஆவேசம்!
நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கிலிடுங்கள்: மோடி ஆவேசம்!
நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கிலிடுங்கள்: மோடி ஆவேசம்!

அகமதாபாத்: நான் குற்றவாளி என்றால் என்னை தூக்கில்போடுங்கள் என்று குஜராத்  முதலமைச்சர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.

பிரபல உருது வார ஏடு ஒன்றுக்கு பேட்டி அளித்த மோடி, கோத்ரா ரெயில் எரிப்புக்கு  பிந்தைய நிலை, குஜராத் முஸ்லிம்களின் நிலை மற்றும் பல்வேறு உணர்ச்சி பூர்வமான  விஷயங்கள் குறித்து அதில் விளக்கம் அளித்துள்ளார்.

"கோத்ரா கலவரத்தை நான் வேடிக்கை பார்த்ததாக,பல முனைகளில் இருந்து  தாக்குதல்களும், விமர்சனங்களும், கண்டன கணைகளும் என் மீது தொடுக்கப்பட்டன.  ஆனால் அவற்றில் எல்லாம், நியாயம், உண்மை இல்லை என்பது இப்போது  நிருபணமாகி வருகிறது.

நான் குற்றவாளி என்றால்,என்னை தூக்கில் போடுங்கள்.மற்ற மாநிலங்களை விட  குஜராத் முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்பு, சுய தொழில் போன்றவற்றில் சிறப்பான  நிலையில் உள்ளனர்” என்று அந்த பேட்டியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவையின் முன்னாள்  எம்.பி.யான ஷாகித் சித்திக்தான் இந்த வார ஏட்டின் ஆசிரியர் ஆவார்.

மோடியிடம் இந்த பேட்டியை எடுத்தது தொடர்பாக தமது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும்  சித்திக்,"கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தை  மையமாக வைத்து காணப்பட்ட இந்த பேட்டிக்கு, நரேந்திர மோடி ஒப்புக் கொள்வார்  என்று நான் நினைத்துப் பார்க்க வில்லை.

அவர் இந்த பேட்டிக்கு ஒப்புக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் எந்த ஒரு  கேள்விக்கும் பதில் அளிக்காமல் தவிர்க்க வில்லை.எல்லா கேள்விகளுக்கும் தயக்கம்  இன்றி பதில் அளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் பேச்சு அற்பத்தனமானது: குர்ஷித்

இதனிடையே மோடியின் இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்,"மோடியின் பேச்சு அற்பத்தனமாக இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மோடியோ அல்லது மக்களோ எந்த முடிவு எடுக்கப்போவது கிடையாது.நீதிமன்றம் மட்டுமே இறுதி முடிவு எடுக்கும்”என்று கூறியுள்ளார்.