Published:Updated:

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 என்னதான் வானத்தைக் கீறி வைகுண்டம் போனாலும் கூரை ஏறிக் கோழி பிடிக்கவும் தெரியணும். பார்த்தீங்களா, எப்படிப் பழமொழியையே மாற்றிப் போட்டோம்னு... அதுதான் தமிழன். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற மோடி, தமிழ்நாட்டிலும் கட்சியைப் பலப்படுத்த சில யோசனைகள்...

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 எப்போ தமிழகம் வந்தாலும் முதலில் அண்ணா சிலைக்கு ஒரு மாலையைப் போட்டுடணும். (அண்ணா ஹசாரே இல்லை, இது வேற அண்ணா) தமிழகத்தில் சின்னதா திராவிட டச் கொடுத்தால்தான், எல்லோருக்கும் பிடிக்கும்.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 தமிழ்நாட்டு எல்லைக்குள்ளே கால் வெச்சதுமே உங்களோட வடநாட்டு கெட்டப்பை மாத்திட்டு வேட்டி சட்டைக்கு மாறுங்க. ஒரு துண்டையும் தோளில் போட்டுக்கோங்க. வயல்வெளிப் பக்கமா கார்ல போறப்ப, சட்டுன்னு வயக்காட்டுல இறங்கி ஒரு போஸ் கொடுங்க.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!
நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 கொடுத்த காசுக்கு மேல கூவுற தொண்டர்களை வைத்து 'புரட்சிப் பிரதமர் வாழ்க’னு கூவச் சொல்லணும். தமிழகத்தைப் பொறுத்தவரை தன்னோட பெயரில் புரட்சி இல்லாத எந்தத் தலைவரையும் அவ்வளவு லேசா தமிழர்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஆளானப்பட்ட சரத்குமாரே புரட்சித் திலகம்னா பார்த்துக்கங்களேன்.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 நீங்க டீக்கடை வெச்சிருந்தது எல்லோருக்கும் தெரியும். அந்த டீக்கடை தொழிலையே சின்ன வயதில் தமிழ்நாட்டுக்கு வந்துதான் கத்துக்கிட்டேனு சொல்லுங்க. உங்களுக்கு ஒரு மனைவி இருக்கிற விஷயத்தையே தெரிஞ்சுக்க முடியாதவங்க, இதையெல்லாமா துப்பறியப் போறாங்க?

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 திருவள்ளுவரை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுங்க. பெரியாரையும் பிடிக்கும்னு சொல்லுங்க. அவங்களைப் பார்த்துதான் நீங்களும் தாடி வளர்க்க ஆசைப்பட்டதா சொல்லுங்க. (ஏற்கெனவே விஜயகாந்த் ஆரம்பிச்சு வெச்சிருக்கார்)

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 சும்மா வட நாட்டு சேட்டு தமிழ் பேசற மாதிரி வண்க்கம், நன்றி மட்டும் தமிழில் சொல்றதெல்லாம் ஓல்டு ஸ்டைல். இனித் தமிழகம் வரும்போதெல்லாம் திருநெல்வேலி பாஷை பழகிட்டு 'எவம்லே... தமிழக மீனவர்கள் மேல கை வைக்கிறது?'னு சவால் விடக் கத்துக்கணும். தென் தமிழகமே உங்க பக்கம் வந்திடும்.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தாச்சு. அடுத்ததா 'உயர் செம்மொழி’ அந்தஸ்து கொடுக்கப்போறதா அடிச்சுவிடுங்க.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 எங்க ஊர்ல இளைஞர் அணித் தலைவர்களுக்கே உங்க வயசு இருக்கும். இருந்தாலும் அம்புட்டு பேரும் டை அடிச்ச தலையோடதான் அரசியல் பண்ணுவாங்க. அதனால, தமிழகத்திற்கு வரும்போது கொஞ்சம் கரு மை அடிச்சுட்டு வந்து பழகுங்க.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 பொதுக்கூட்டத்தில் பேசிட்டு இருக்கும்போதே கூட்டத்தில் யாரையாவது கையைக் காட்டி 'என்ன குமாரு... சவுக்கியமா இருக்கீங்களா?'னு கேட்கணும். சுமார் மூஞ்சி குமாரோ, ரொம்ப ரொம்ப சுமார் மூஞ்சி குமாரோ எதாவது ஒரு குமாரு நீங்க கை காட்டின திசையில் கண்டிப்பா இருப்பார். பிறகென்ன, 'சாதாரணத் தொண்டனையும் நினைவில் வைத்து நலம் விசாரிக்கிறார்’னு ஒரே புகழ்ச்சிதான்.

நல்லாக் கேட்டுக்குங்க நமோ!

 கடைசியா பெரிய தேசியக் கட்சினா அதில் குறைஞ்சது நாலு கோஷ்டியாவது இருக்கணும். அடிதடி சண்டை போட்டுக்கணும். சண்டையில சட்டை கிழியணும். அப்போதான் கட்சிக்கு 'மாஸ்’ காட்ட முடியும். கட்சியில் கோஷ்டி இருக்கணும்னா, அதுக்குக் கட்சியில் கணிசமான ஆட்கள் இருக்கணும்கிறதையும் மறந்துடாதீங்க!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

அடுத்த கட்டுரைக்கு