ஒரு மாநிலக் கட்சி பெறும் எம்.பி-க்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு கம்யூனிஸ்ட் கட்சிகள் வென்றிருக்கும் தொகுதிகள். நாடாளுமன்றத்தில் சி.பி.எம். எம்.பி-க்கள் ஒன்பதே பேர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரே ஓர் இடம். தேர்தல் தோல்விக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் பேசினேன்.

''யாருமே எதிர்பார்க்காத அளவு பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா வென்றிருக்கிறது. இது

குறித்து உங்கள் பார்வை?''

''முதலில் இந்த வெற்றி என்பது பாரதிய ஜனதாவிற்குக் கிடைத்த வெற்றி அல்ல. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் வெற்றி. கடந்த ஓர் ஆண்டு காலமாக பா.ஜ.க-வின் மறைமுகக் கூட்டாளியாகச் செயல்பட்டு, தங்களின் நலனைக் காக்க அவர்களை ஆட்சியில் ஏற்றியுள்ளார்கள். பெரும் முதலாளிகளின் கைப்பாவை அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது.''

''காங்கிரஸுக்கு மாற்றாக பாரதிய ஜனதாவை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்கிறீர்களா?''

''காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவிற்கும் பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு வித்தியாசமும் இல்லை. பத்தாண்டு கால மக்கள் விரோத காங்கிரஸ் அரசின் மீதான வெறுப்பையும் கோபத்தையும் பாரதிய ஜனதா அறுவடை செய்துவிட்டது. மோசமான பொருளாதாரக் கொள்கை மட்டும் அல்லாமல், மதவாதத்தையும் வகுப்புவாதத்தையும் செயல்திட்டத்தில் வைத்திருக்கும் ஓர் அரசு வந்திருப்பது இடதுசாரிகளான எங்களுக்குக் கவலையளிக்கிறது.''

''ஆனால், தமிழ்நாட்டில் வேறு மாதிரியான முடிவுகள் வந்திருக்கிறதே?''

'' தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், கேரளா, ஒடிசா போன்ற ஒரு சில மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் முற்போக்கு சக்திகளும் வென்றிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. குறிப்பாக கேரளாவில் எதிரும் புதிருமாக இருந்தாலும் மதச்சார்பற்ற இடதுசாரிகளும் காங்கிரஸும் வென்றிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மோடி அலை என்ற தீமை உள்ளே வராமல் அ.தி.மு.க. வென்றிருப்பது, மதவாதப் பிரசாரம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் செல்லாது என்று நிருபித்துள்ளது.''

''தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பெற்றுள்ள வெற்றி அதன் மூன்று ஆண்டு கால ஆட்சிக்குத் தமிழக மக்கள் தந்த சர்ட்டிஃபிகேட்டா?''

''இது நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தல். கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இடதுசாரி இயக்கங்கள் அம்பலப்படுத்தி வந்தன. பிரசாரத்தின்போது ஜெயலலிதாவும் காங்கிரஸ் அரசின் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். வரப்போகும் ஆட்சியில் பங்கேற்போம் என்கிற நம்பிக்கையையும் கொடுத்தார்கள். அந்த அரசியலே வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்று கருதுகிறேன்.''

''எப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதே?''

''இது ஒரு நல்ல அடையாளமாக எனக்குத் தோன்றவில்லை. எந்த ஆட்சியிலும் மக்களுக்காக முதலில் ஒலிப்பது இடதுசாரிகளின் குரல்தான். தேசிய அளவில் இடதுசாரிகள் பலவீனப்படுவது அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு நன்மை இல்லை.''

''தமிழ்நாட்டில் இடதுசாரிகள் வாங்கியுள்ள வாக்குகள், நோட்டோ ஓட்டுகளைவிட குறைவாக இருக்கிறதே?''

''மத்தியில் யாரின் ஆட்சி என்று முன்னிலைப்படுத்த இயலாத சூழ்நிலையில் இடதுசாரிகள் தேர்தலைச் சந்தித்ததும் திராவிடக் கட்சிகள் வெல்லப்போவது தாங்கள்தான் என்று செய்த விளம்பரங்களில் ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களின் வாக்குகள் வெல்லும் அணிக்கே போகட்டும் என்று முடிவுசெய்ததன் விளைவே இது. இந்த நிலையை மாற்ற முயற்சிப்போம்.''

''அசுர பலத்தோடு பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அதன் ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

''அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம், ராமர் கோயில் கட்டுவோம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று இந்தியாவின் ஒற்றுமையைப் பாதிக்கச் செய்யும் கடுமையான விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். இப்படியான இந்திய மக்கள் விரோதத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒரே கட்சி, பாரதிய ஜனதா மட்டுமே. நிச்சயமாக அதன் ஆட்சி இந்தியாவுக்கு இருண்ட காலமாகத்தான் இருக்கும்.''

''ஆனால் மக்கள் அவர்களை அங்கீகரித்துதானே வெற்றியைத் தந்திருக்கிறார்கள்?''

''அப்படிப் பார்க்கத் தேவை இல்லை. பதிவான வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 50 விழுக்காட்டிற்கும் கீழ்தான் அவர்கள் ஓட்டு வாங்கியுள்ளனர். அதிலும் பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைத் துரத்தியாக வேண்டிய கட்டாயத்திலிருந்த மக்களின் முன் தாங்களே அவர்களின் மாற்று என்பதாக மாயத்தோற்றத்தினை அவர்கள் ஏற்படுத்தியதால் கிடைத்த வெற்றிதான். மக்கள் அவர்கள் செயல் திட்டத்திற்கு அங்கீகாரமெல்லாம் கொடுக்கவில்லை.''

''கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''கம்யூனிஸ்ட்கள் என்பவர்கள் மக்களுக்காகப் போராடுபவர்கள். இது போன்ற தேர்தல் முடிவுகளினால், எங்களின் அர்ப்பணிப்பு உணர்வு அற்றுப் போகாது. புதிய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்காணித்து பொருளாதார, வகுப்புவாத நடவடிக்கைகள் இருக்குமானால் அதை எதிர்த்து மக்களை திரட்டிப் போராடுவோம். மாநில அரசின் நடவடிக்கைகளையும் மத்திய அரசின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்தே எங்கள் பாதையைத் தேர்ந்தெடுப்போம்.''

- செந்தில்குமார்