பெங்களூரு தனி நீதிமன்றத்தில் தனது இறுதிவாதங்களை முடித்துவிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங். இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதி வாதங்களை வைக்க வேண்டும். அதற்குள் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பவானி சிங் தன்னுடைய இறுதி வாதங்களை வைத்து வரும்போது அவரைச் சந்தித்து நாம் பேட்டி கேட்டோம்.

''தற்போது நீதிமன்றத்தில் என்னுடைய இறுதி வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த

சூழ்நிலையில் பேட்டி கொடுப்பது நன்றாக இருக்காது. என்னுடைய இறுதி வாதம் முடித்த பிறகு வாருங்கள் நிச்சயம் பேசலாம்'' என்று சொல்லியிருந்தார் பவானி சிங். அவரது இறுதி வாதம் முடிந்ததும், கடந்த 27-ம் தேதி சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள பவானி சிங்கின் அறைக்குச் சென்றோம். தன்னுடைய ஜூனியர் வழக்கறிஞர் மராடியை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு நமக்கு பேட்டி கொடுத்தார் பவானி சிங். அதில் இருந்து...

''18 வருடங்களாக நடக்கும் வழக்கு இது. இந்த வழக்கில் அரசு தரப்பின் இறுதி வாதங்களை நீங்கள்தான் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பல வழக்குகளை நடத்தியிருக்கிறேன். எனக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான். வழக்குகளைப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் கிடையாது. எனவே, இந்த வழக்கில் இறுதி வாதத்தை முடித்துவிட்டோம் என்பதெல்லாம் எனக்குப் பெரிதாகவும் தெரியவில்லை. அதை நினைத்துப் பெருமைப்படவும் அவசியம் இல்லை!''

''இந்த வழக்கைப் பதிவுசெய்த, தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் ஒத்துழைப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?''

''அவர்கள் எங்களுக்கு எங்கே ஒத்துழைப்பு கொடுத்தார்கள்? ஒரு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. ஒன்றரை ஆண்டு காலமாக கர்நாடக உயர் நீதிமன்றம், சிட்டி சிவில் கோர்ட் என மாறி மாறி வாதாடி இவ்வழக்கை முடிக்கும் நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக சம்பளம்கூட கொடுக்கவில்லை, என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களது ஒத்துழைப்பு இப்படித்தான் இருந்தது... இருக்கிறது.''

''இந்த வழக்குக்கு வலிமையான ஆதாரங்கள் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?''

''குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் இருக்கும் வங்கி கணக்குகள், பத்திரப் பதிவு ஆவணங்கள், 16 கம்பெனிகள் ரெஜிஸ்டர் செய்தது, 1991-க்கு முன்பு இருந்த சொத்து விவரம், 1996-க்குப் பிறகு காட்டப்பட்ட சொத்து விவரம்... இவை அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இவை வலிமையான ஆதாரங்கள்தான்!''

''முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த அளவு இதில் தொடர்பு இருக்கிறது?''

''அது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறேன். இப்போது அதுபற்றி கருத்துச் சொல்ல முடியாது.''

''ஜெயலலிதா தரப்பு இவ்வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கத்துடன் தடை வாங்கியிருக்கிறதே?''

''இதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.''

''நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?''

''அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், அவர் இந்த வழக்கை விரைவாக முடிக்கும் நோக்கத்தில் அதிக வேகமாகக் கொண்டுசெல்லுகிறார். அந்த விஷயத்தில் சூப்பர்!''

''தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நீங்கள் ஜெயலலிதாவுக்கு சாதகமாகச் செயல்படுகிறீர்கள்’ என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறாரே?

''நான் வழக்கறிஞர். கருணாநிதி அரசியல்வாதி. இந்த வழக்கை அவர் அரசியலாக்கி, அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு பேசுகிறார். நான் பணம் வாங்கினேன் என்பது உண்மைக்குப் புறம்பான தகவல். அப்படி பணம் வாங்கியிருந்தால் இந்த வழக்கை இவ்வளவு வலுவாக இறுதி வாதம் வரை கொண்டுவந்திருக்க முடியுமா? அதனால் யூகத்தின் அடிப்படையில் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் இந்த வழக்கை நேர்மையாக கையாண்டு இருக்கிறேன்.''

''இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எப்படி வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?''

''வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பைப் பற்றி எதுவும் பேசக் கூடாது. நீதி வெல்லும்!''

- பெங்களூரிலிருந்து... வீ.கே.ரமேஷ், படம்: க.தனசேகரன்