அர்ஜுனன்.ஜி., திருப்பூர்-7.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ன?

1954-ம் ஆண்டு பிரதமர் நேரு தன்னுடைய

பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார். பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டபோதுதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1. ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளின் எல்லையையும் அரசுரிமையையும் மதித்தல்.

2. மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்யாது இருத்தல்.

3. மற்ற நாடுகள் மீது போர் தொடுக்காமல் இருத்தல்.

4. சமத்துவம்.

5. சமாதானச் சுகவாழ்வு - ஆகியவையே நேருவின் பஞ்சசீலக் கொள்கை. இதுவே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படை ஆகும். அவர் தன்னுடைய நடவடிக்கைகளின் மூலமாக தன்னுடைய உள்நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு, அதாவது இந்திய விடுதலைப் போராட்டம் நடந்துகொண்டிருந்த கால கட்டத்தில் ஐரோப்பியப் பயணம் சென்றார். அங்கு அவரை, ஜெர்மன் நாட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். அப்போது அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். இத்தாலி முசோலினி, அவரைப் பார்க்க வேண்டும் என்று நான்கைந்து முறை அழைத்தபோதும், நேரு அந்த அழைப்பை ஏற்கவில்லை. இதுவும் அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு நடந்ததுதான். பொதுவாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் ஒரு அரசியல் தலைவர், நாடு இருக்க வேண்டும் என்பதே நேரு வகுத்த இலக்கணம்.

கோவை சுந்தரம், சேலம்.

தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான அணியின் கூட்டணி தொடருமா?

இப்போதே பா.ம.க அந்தக் கூட்டணியில் இருக்கிறதா என்பது சந்தேகம்தான். நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகும், 'என் தலைமையில்தான் கூட்டணி, பி.ஜே.பி-யைவிட தே.மு.தி.க-வுக்கு அதிக தொகுதிகள் வேண்டும்’ என்று விஜயகாந்த் பிடிவாதமாக இருந்தார். சட்டமன்றத் தேர்தலில் இது அதிகம் ஆகும். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக இந்தக் கட்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் நிச்சயம் விரும்புவார். இதனை ராமதாஸும் வைகோவும் நிச்சயம் ஏற்க மாட்டார்கள். எனவே, இந்தக் கூட்டணி தொடரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஜெயலலிதா புத்திசாலித்தனமாக பி.ஜே.பி-யை தன்னுடைய அணிக்குள் கொண்டுவந்து, மோடி பிரசாரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார். பத்து, பதினைந்து பேர் எம்.எல்.ஏ-வானால், கட்சிக்கு நல்லது என்று தமிழக பி.ஜே.பி-யும் நினைக்கும். ராமதாஸ் தன்னுடைய சமுதாயக் கூட்டணி அஸ்திரத்தை மீண்டும் எடுப்பார். விஜயகாந்த்தும் வைகோவும் சேர்ந்து ஒருவேளை தேர்தலைச் சந்திக்கலாம். இன்றைய சூழ்நிலை இதுதான்!

எஸ்.பஷீர்அலி, பேராவூரணி.

'அழகிரியை நானும் மறந்துவிட்டேன்; தி.மு.க-வும் மறந்துவிட்டது’ என்று கருணாநிதி சொல்வது உண்மையான சொல்லா? பெத்த மனம் பித்து என்ற அடிப்படையில் வந்ததா?

10 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருமுறை இப்படி கருணாநிதி சொல்லியிருக்கிறார். மறுபடி அழகிரியைச் சேர்த்துக்கொண்டார் கருணாநிதி. இருவரும் மோதிக்கொள்ளலாம். மொத்தமாகப் பிரிந்துவிட முடியாது. அதனை மீறி அன்று கருணாநிதி ஏன் அப்படிச் சொன்னார்? அப்படிச் சொல்வதன் மூலமாக ஸ்டாலினையாவது தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்பதற்காகத்தான். ஸ்டாலின் ராஜினாமா செய்ததாகச் சொல்லப்பட்ட தினத்தில் சொல்லப்பட்ட வார்த்தை இது. ஒருவித பதற்றமான சூழ்நிலையில் சொல்லப்பட்டது அது!

க.பாலகிருஷ்ணன், தாமரைப்பாளையம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் உணர்வு என்ன?

தமிழகத்தில் மட்டும் திடீரென தேர்தல் தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் 144 தடை உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்தது. இது ஆளுங்கட்சிக்கு வசதியாகப் போனது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். அதற்கு சரியான பதிலை இன்றுவரை தேர்தல் கமிஷன் தரவில்லை.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

மத்திய அரசுடன் மாநில அரசு சுமுகமாகச் செயல்பட முடியாதுபோலத் தெரிகிறதே?

தமிழகத்துக்கு ஒரே ஒரு இணை அமைச்சர் மட்டும்தான் கிடைத்துள்ளார். இந்த நிலையில் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தால் தமிழகத்துக்கான எந்தத் திட்டமும் ஒழுங்காகக் கிடைக்காது. இனி ஜெயலலிதா தனது நிலைப்பாடுகளை மிக ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அ.தி.மு.க போல், தி.மு.க-வில் 'சிங்கிள் மேன் ஆர்மி’ போன்றதொரு தலைமையைக் கொண்டுவர முடியுமா?

அது முதலில் எம்.ஜி.ஆர், பிறகு ஜெயலலிதா... என 'சிங்கிள்’ முகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி. 'தம்பி ராமச்சந்திரா... உன் முகத்தைக் காட்டு போதும்!’ என்றுதான் அண்ணாவே சொன்னார். அந்த இடத்தை ஓரளவு ஜெயலலிதாவும் தக்கவைத்துக்கொண்டார். தி.மு.க-வில் அப்படிச் சொல்ல முடியாது. அண்ணா இருந்த காலத்திலேயே அது கூட்டுத் தலைமைபோல இருந்த கட்சிதான் என்பார்கள். இப்போதோ அன்பழகன், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராஜாத்தி ஆகியோர் கருத்தை அறிந்த பிறகுதான் எந்த அறிவிப்பையும் கருணாநிதி செய்வார் என்பதே பரவலான செய்தி. அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த பிறகுதான் அறிவிப்பாராம். அப்படி இருக்கும்போது 'சிங்கிள் மேன் ஆர்மி’யாக அவர் எங்கே ஆவது?

மு.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்-6.

'காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தாமதமாக ஆரம்பித்ததுதான் தோல்விக்குக் காரணம்’ என்கிறாரே ஞானதேசிகன்?

காலம் கடந்த ஞானோதயம் இது. கடைசி வரைக்கும் நல்லது செய்யவே ஆரம்பிக்கவில்லையே. அதுதான் தோல்விக்குக் காரணம்!

சிவன் தெற்கு வீதி சிங்கம், தோப்புத்துறை.

37 இடங்களில் வெற்றிபெற்றும் வெற்றி போதவில்லை என்று அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் பந்தாடுகிறார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வும் காங்கிரஸும் அமைதியாக இருக்கிறதே?

அ.தி.மு.க-வைப்போல் மற்ற கட்சிகளில் நடக்க முடியாது. அங்குதான் நினைத்தால் நீக்கலாம். நினைத்தால் சேர்க்கலாம். கருணாநிதி, ஒரு மாவட்டச் செயலாளர் சொல்வதை நம்புகிறாரோ இல்லையோ... அவர் சொல்வதைக் கேட்கவாவது செய்வார். ஆனால், கார்டனில் கதவே திறக்காது. எனவே, அ.தி.மு.க பாணி நடவடிக்கைகள் மற்ற கட்சிகளில் சாத்தியம் இல்லை!

எஸ்.பி.பாபு, முள்ளக்காடு.

மோடிக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தது அரசியல் நாகரிகம்தானே?

டெல்லியில் எப்போதும் நாகரிக அரசியல் இருக்கும். நான்கு நாட்களுக்கு முன்புதான் மிகக் கடுமையாக இருவரும் மேடைகளில் விமர்சித்துக்கொண்டார்கள். தேர்தல் முடிந்ததும், மோடி பதவி ஏற்புக்கு சோனியாவும் ராகுலும் வந்ததும், அங்கிருந்த பி.ஜே.பி தலைவர்களிடம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்ததும் அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு. இது தமிழகத்தில் வருமா? ம்கூம்!

அ.குணசேகரன், புவனகிரி.

பிரியங்காவை தலைமை ஏற்க காங்கிரஸ் கட்சியில் சிலர் அழைப்பது சரியா?

பிரியங்கா தலைமை வகித்தால் அது மறைமுகமாக வதேரா தலைமையாகத்தான் இருக்கும். அதற்கு ராகுல் காந்தியே தொடர்வது சரியானது!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'உங்கள் போராட்டத்தில் மகா ராணா பிரதாப் சிங்கைப் போல, சாந்தத்தில் அக்பராக, இதயத்தில் சாவர்க்கராக, மனத்தால் அம்பேத்கராக உங்கள் டி.என்.ஏ-வைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்து கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவிகிதம் பேர் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் பிரதம மந்திரியாக இருங்கள்’ என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கோபாலகிருஷ்ண காந்தி சொல்லியிருப்பது பற்றி..?

அனைவர் மனத்திலும் இருப்பதுதானே அது!