''தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 1-ம் தேதி முதல் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா சொல்லியிருப்பது சாத்தியமா?

மின்வெட்டுப் பிரச்னையை சரி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? தமிழக மின்வாரிய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''2011-ம் ஆண்டு மே மாதம் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது தமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம் மெகா வாட். ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8 ஆயிரம் மெகா வாட்தான். அதாவது, கிடைத்த மின்சாரத்துக்கும் தேவைப்பட்ட மின்சாரத்துக்குமான இடைவெளி 4 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது. அதை, சீர்செய்ய பகீரத முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வந்தது. அதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகா வாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 500 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. தவிர, 3 ஆயிரத்து 300 மெகா வாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படிப்படியாகப் பெறப்படும். புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாகவும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது. எனவே, மே கடைசி வாரங்களில் தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியது.

ஜூன் மாதத்தில் இருந்து காற்றாலை மூலம் தினமும் குறைந்தபட்சம் 3,000 மெகா வாட் மின்சாரம் (உற்பத்தி நிறுவு திறன் 7000 மெகா வாட்) கிடைக்கலாம். காற்றாலை மின்சாரம் முழுவதையும் பயன்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவேதான், தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1-ம் தேதி முதல் அறவே நீக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்கிறார்கள்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் கே.விஜயன், ''மின்வெட்டு ரத்து அறிவிப்பு, தமிழக

மக்களுக்கு இனிப்பான, தித்திப்பான செய்திதான். பொதுமக்கள், தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி. காற்றாலை மின் உற்பத்தியை கணக்கில் கொண்டு மின்வெட்டு இனி இருக்காது என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை காற்று வீசும் பருவகாலம். அந்தக் காலகட்டத்தில்தான் காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். காற்று இல்லையென்றால் மின்வெட்டு ரத்து அறிவிப்பு பஞ்சர் ஆகிவிடும். அதற்கு என்ன வழி செய்யப்பட்டுள்ளது என்பதைச் சொல்ல வேண்டும்'' என்று கணக்குப் போடுகிறார்.

தி.மு.க தொழிலாளர் அணி செயலாளரும் மின் கழக தொ.மு.ச பொதுச்செயலாளருமான சிங்கார ரத்தினசபாபதி, ''தி.மு.க ஆட்சியில் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 2 மணிநேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மின்வெட்டு அதிகரித்தது. மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. சென்னை மாநகரம்கூட மின்வெட்டில் இருந்து தப்பவில்லை. இவர்கள் இப்போது வந்து ஒரு யூனிட் மின்சாரத்தைக்கூட புதிதாக உற்பத்தி செய்யவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின்வெட்டு ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்த முதல்வர், இப்போது மின்வெட்டு ரத்து செய்யப்படுவதற்கு தி.மு.க போட்ட திட்டங்கள்தான் காரணம் என்பதையும் சொல்லியிருக்கலாம்.

வடசென்னை, மேட்டூர், வல்லூர் ஆகிய இடங்களில் 2008-ம் ஆண்டு தலைவர் கலைஞர்தான் 2,500 மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தொடங்கினார். 2011-ல் ஆட்சியில் இருந்து இறங்கும்போது 55 சதவிகித பணிகளை முடித்துவிட்டுத்தான் சென்றோம். மீதியுள்ள 45 சதவிகித பணிகளை முடிக்க 3 வருடங்கள் ஆகியிருக்கிறது. இதுதான் மின்வெட்டை சரிசெய்ய அவர்கள் எடுத்த பகீரத முயற்சி. ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரை காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக 3,000 மெகா வாட் கிடைக்கும். இதற்கிடையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து, 3,300 மெகா வாட் மின்சாரத்தை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வாங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. இதுதான் மின்வெட்டு ரத்தான கதை. காற்று சுழலவில்லை என்றால் மின்வெட்டு இருக்கும் என்பதையும் முதல்வர் சூசகமாக சொல்லியிருக்கிறார்'' என்றார்.

எப்படியோ மின்வெட்டு இல்லாத தமிழகமாக மாறினால் சந்தோஷம்தான்!

-எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: ஆ.முத்துக்குமார்