Published:Updated:

தமிழகத்தின் பெருமை லண்டன் ஒலிம்பிக்கில்..!

தமிழகத்தின் பெருமை லண்டன் ஒலிம்பிக்கில்..!
தமிழகத்தின் பெருமை லண்டன் ஒலிம்பிக்கில்..!

லிம்பிக் விளையாட்டுகள் லண்டன் மாநகரில் ஜூலை 27 ஆம் தேதி துவங்கி  ஆகஸ்டு  12 வரை  நடைபெறுகிறது. உலகம் முழுக்க ஒலிம்பிக் உற்சாகம் வேகமாக பரவ  ஆரம்பித்துள்ளது. இதுவரை ஒலிம்பிக்கில் நமது தமிழ்நாட்டு கலாச்சாரத்தை  வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்ததில்லை.ஆனால் இந்த ஒலிம்பிக்கில்  புதிய வரலாற்றை  பெருமையை  தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் தந்தள்ளனர் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா  குழுவினர்.

ஆம்! லண்டன்  ஒலிம்பிக்கில் தமிழநாட்டு கலாச்சாரத்தை , இந்தியாவின் பெருமையை  பறைசாற்றும் வகையில் சிறப்பு கலை நிகழ்சிகளை நடத்தக்கூடிய  வாய்ப்பு 'ஸ்பேஸ்  கிட்ஸ் இந்தியா' குழுவினருக்கு கிடைத்தது.ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நாசா  விண்வெளி மையத்துக்கு பல நூறு தமிழக மாணவர்களை அழைத்து சென்ற அனுபவம்  பெற்ற 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' ஒலிம்பிக் விளையாட்டுக் களத்தில் சர்வதேச  குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்தின் பெருமை லண்டன் ஒலிம்பிக்கில்..!

இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து பரதம் போன்ற கலை கலாசார நிகழ்சிகளை  நடத்த  ஒலிம்பிக் குழு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'விற்கு அழைப்பு விடுத்தது.

ஒலிம்பிக்கில் கலை நிகழ்சிகளை நடத்த உலகம் முழுவதிலுமிருந்து 22 ஆயிரம் கலைக்  குழுக்கள் தங்கள் கலைத்திறனை பறை சாற்றும் விடியோக்களை ஒலிம்பிக் குழுவினருக்கு  அனுப்பி வைத்திருந்தனர். அவற்றில் ஆயிரம் குழுவினர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்தியாவிலிருந்து இந்த குழு தேர்வானது.நம் தமிழகத்தின் பாரம்பர்ய கரகாட்டம் , பரத  நாட்டியம் , இந்திய கலை வடிவமாம் ஒடிசி,கதக்,பஞ்சாப்பின் பாங்கர நடனம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் ஒலிம்பிக்கில் அரங்கேறியது.

இந்த  பயணத்தின் முன்னோடியும்,ஒலிம்பிக் கலை நிகழ்சிகளை இந்தியாவிலிருந்து   ஒருங்கிணைக்கும் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின்  இயக்குனர்  ஸ்ரீமதி கூறுகையில், ” அடிப்படையில் இந்தியாவின் பெருமையை உலகம் முழுக்க கொண்டு செல்லவேண்டும்  என்பது என்னுடைய ஆசை - லட்சியம் எல்லாமே.

உலக நாடுகளின் பெரும்பாலனவற்றை சுற்றி வந்துள்ளேன்.பழமை பாரம்பர்யம்,கலை,  கலாசாரம், அற்புதமான திறமைகள்  நமது நாட்டில் அளவற்று கிடக்கிறது.ஆனால்  அவற்றை சரியாக உலக அரங்கில் நாம் வெளிப்படுத்துவது இல்லை.இந்த சூழ் நிலை  எந்த நாட்டுக்கு போகிறபோதும் வருத்தபட  வைக்கும். வெறும் கவலை பட்டால் எதுவும்  நடக்காது. உலகின் எல்லா நாட்டு மக்களையும் பெரிதும் கவனிக்க வைக்கும் நிகழ்ச்சி  ஒலிம்பிக்.சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்றிருந்தேன்.

##~~##
அப்போது அங்குள்ள ஒலிம்பிக் அமைப்பாளர்களிடம்  தமிழ் கலாச்சாரம், இந்திய  பாரம்பர்யம், நமது நடன கலைகள், இசை ஆகிய திறன்கள் குறித்து விரிவாக விளக்கி  சொன்னேன்,சொந்த நாட்டு பெருமைகளை நான் சொல்லி கொண்டிருந்த போதே  ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஆர்வத்துடன்,நான் நடத்தக்கூடிய நிகழ்சிகளின் தொகுப்பை  முன்னோட்டமாக அனுப்பி வைக்க கேட்டார்கள்.
லண்டனில் இருந்து சென்னை வந்தவுடனேயே இந்த பணிகளில் ஈடுபட  ஆரம்பித்தேன்.   சென்னையில் உள்ள திறமையான இளைஞர் குழுக்களை அடையாளம் கண்டு  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியை  அரங்கேற்றினோம். அதை விடியோ எடுத்து லண்டனுக்கு அனுப்பி வைத்தேன்.
தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தது போல அந்த நாட்களில் ஒரே டென்ஷன்.ஒரு  வாரத்தில்,ஏகப்பட்ட பாராட்டுகளுடன் மெயில் அனுப்பினார்கள் லண்டன்  அமைப்பாளர்கள்.இந்த நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் பெருமை உலகம்  முழுக்க செல்லும்” என்று ஒலிம்பிக்கில் கலை நிகழ்சிகள் நடத்த வாய்ப்பு கிடைத்ததை  உற்சாகத்துடன் சொன்னார்.
தமிழகத்தின் பெருமை லண்டன் ஒலிம்பிக்கில்..!

ஸ்ரீமதி மேலும் பேசுகையில்,”நம் இளைஞர்கள் மிகுந்த திறமையோடு உற்சாகத்துடன்  நிகழ்சிகளுக்கு தயாராக உள்ளனர், லண்டனுக்கு சென்று நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு  கிடைத்துள்ளதே தவிர பயணம் உள்ளிட்ட செலவுகள் நம்முடைய பொறுப்பு என்பது பெரிய  சவாலாக உள்ளது.

தமிழ்நாட்டின் பெருமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் இந்த முயற்சிக்கு தமிழக  அரசிடமும், தனியார் நிறுவனங்களிடமும் மிகுந்த நம்பிக்கையோடு உதவி கேட்டோம்.  பெரிதாக எதுவும் நடக்காத நிலையில் அவரவர் சொந்த செலவிலேயே ஒலிம்பிக்  செல்கிறோம். நம் நாட்டு பெருமையை சர்வதேச அளவில் நிலை நாட்ட இந்த பயணம்  பெரிதாக பயன்படும் என்ற நம்பிக்கையே மகிழ்ச்சி தருகிறது”என்றார்.

"இது போன்ற நிகழ்சிகளுக்கு மத்திய,மாநில அரசுகளும்,பெரிய நிறுவனங்களும் உதவி  செய்தால் இளைய சமுதாயம் பெரும் அளவில் சாதனைகள் புரிய முடியும் ”என்று  நம்பிக்கை மிளிர கூறுகிறார் ஸ்ரீமதி!