Published:Updated:

ரயில் விபத்து: ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!

ரயில் விபத்து: ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!
ரயில் விபத்து: ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!
ரயில் விபத்து: ஜெயலலிதா நிதியுதவி அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"புதுடெல்லியிலிருந்து  சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு விரைவு ரயிலின் எஸ்-11 என்ற  பெட்டி நெல்லூர் ரயில்வே நிலையம் அருகே இன்று அதிகாலை தீப்பிடித்ததில் அந்தப்  பெட்டியில் பயணம் செய்த 32 பயணிகள்  உயிரிழந்துள்ளனர்.பல பயணிகள்  தீக்காயங்களுடன் நெல்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

##~~##
இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும்  உள்ளதால்,அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும்,  அவர்களுக்குத் தேவையான உதவிகளை புரியவும் மூத்த அமைச்சர்களும், அரசு  அதிகாரிகளும் நெல்லூருக்கு விரைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், தீக்காயம்  அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.