Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:

தி.திருமலைசாமி, சென்னை-78.

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு முடிவுக்கு வருமா... வராதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணைக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை விலக்கிக்கொண்டுவிட்டனர். எனவே, இறுதி வாதங்கள் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கிவிட்டன. எனவே, வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

 எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

கழுகார் பதில்கள்!

குஷ்புவின் ராஜினாமா எதிர்பாராததுதானே?

ஆம்! அவர் கடைசி வரை தி.மு.க-வில் இருந்து போராடுவார் என்றே பலரும் நினைத்தனர். அவரது இயல்பும் அதுதான். ஆனால், இனி போராடுவதால் எந்தப் பயனும் இல்லை என்ற விரக்தியால் இப்படிப்பட்ட முடிவை எடுத்துவிட்டார். எனவே, இது யாரும் எதிர்பாராததே!

 ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம்.

கழுகார் பதில்கள்!

அன்னை தெரசாவின் பொன்மொழிகளில் உங்களைக் கவர்ந்தது?

'இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எப்படி அன்பைச் செலுத்த முடியும்?’

 காந்திலெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்!

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது பற்றி..?

இலங்கையில் முதன்முதலில் தாக்கப்பட்டவர்களே முஸ்லிம்கள்தான். 1900 ஆண்டுகளின் தொடக்கத்திலேயே பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக தர்மபாலா, வாலி சிங்க ஹரிச்சந்திரா ஆகிய இருவர் கிளம்பினார்கள். பௌத்தம் பரப்புவது என்ற பெயரில் மற்ற மதத்தவர்களைக் கொச்சைப்படுவதுதான் இவர்கள் வழக்கம். அதனாலேயே இவர்கள் இருவரும் புகழ்பெற்றார்கள். கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை இவர்கள் அதிகம் தாக்கினார்கள். அப்போது இந்து மத எதிர்ப்பை அவர்கள் அவ்வளவாக மேற்கொள்ளவில்லை. மலையாளிகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். தேவாலயங்கள், இலங்கையில் இருக்கவே கூடாது என்றார்கள். முஸ்லிம்களை, 'பம்பாய்க்காரங்க’ என்று அழைத்தார்கள். நம்மூர் நாட்டுக்கோட்டை செட்டியார்களும் முஸ்லிம்களும்தான் அதிக அளவில் வியாபாரங்கள் செய்து வந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது கோபம் அதிகம் ஆனது. 1915-ம் ஆண்டு முதன்முதலாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடங்கியது. எனவே, இப்போதுதான் தாக்குதல் தொடங்கி உள்ளதாகச் சொல்ல முடியாது. தமிழர்களை 'முடித்துவிட்டு’ இப்போது தமிழ் முஸ்லிம்கள் பக்கம் திரும்பியுள்ளனர்.

 அம்பூரணி ச.நாராயணன், பாளையங்கோட்டை.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

'எல்லா மாநிலங்களிலும்தான் குற்றச்செயல்கள் நடக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத ஊடகங்கள், உ.பி-யில் மட்டுமே அதனைப் பெரிதுபடுத்துகின்றன’ என்று சொல்கிறாரே உ.பி முதல்வர் அகிலேஷ்?

எல்லா மாநிலங்களிலும் குற்றச்செயல்கள் நடக்கின்றன. உண்மைதான். ஆனால், அங்கு அகிலேஷ் மாதிரி குற்றச்செயல்களை நியாயப்படுத்தும் முதல்வர் இல்லை. அதனால்தான் உ.பி நிகழ்வுகள் பெரிதுபடுத்தப்படுகின்றன.

இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இந்தியாவே அதிர்ந்த சம்பவம் பற்றி நிருபர்கள் சந்திப்பில் ஒரு பெண் நிருபர், முதல்வர் அகிலேஷிடம் கேட்கிறார். 'உங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையே? நீங்கள் பத்திரமாகத்தானே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார் அகிலேஷ். இப்படிப்பட்டவர் ஆளும் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களைப் பெரிதுபடுத்தாமல் எப்படி இருப்பார்கள்?

 த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்.

கழுகார் பதில்கள்!

சினிமாவுக்கு ஒப்பனை அவசியம். அரசியலுக்கு?

(கொள்கை) விற்பனை அவசியம்!

 மு.கதிரேசன், கோவில்பட்டி.

கழுகார் பதில்கள்!

தமிழர்கள் தங்களது உரிமைகளுக்கான போராட்டங்களில் ஆரம்ப காலகட்டத்தில் சிங்கள முற்போக்கு சக்திகளையும் சேர்த்துக்கொண்டு போராடி இருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் மாபெரும் தவறு அதுதான் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்களே?

ஈழப் போராட்டத்தின் உண்மை நிலவரங்களை அறியாத, அறிய விரும்பாதவர்களின் பேச்சு இது. விடுதலைப் புலிகள் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகை மட்டுமல்ல; சிங்களப் பத்திரிகையும் நடத்தினார்கள். 'தேடுன்னா’ என்ற சிங்கள மொழிப் பத்திரிகையை கிளிநொச்சியில் இருந்து நடத்தினார்கள். அதற்கு 'வானவில்’ என்று பொருள். சிங்கள முற்போக்கு சக்திகளை தங்களோடு இணைப்பதற்கான முயற்சியாகவே இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டது.

'ஜனதா விமுக்தி பெரமுனா’ எனப்படும் இடதுசாரி இயக்கத்துடன் இணைந்து செயல்படவும் முயற்சித்தார்கள். அந்த அமைப்பின் தலைவர் சோமவசன அமரசிங்க, ஃபிரான்ஸில் அடைக்கலம் புகுந்தபோது புலிகளின் முக்கியத் தளபதியான கேணல் கிட்டு அவரைச் சந்திக்க முயற்சித்தார். 'அவர்கள் தங்களது இனவெறி நிலைப்பாட்டை விட்டுவிட்டு, எம்முடன் இணைந்து செயல்பட வந்தால் பேசத் தயார்’ என்று கிட்டு சொன்னார். ஆனால், ஜே.வி.பி. தலைமைதான் வரவில்லை. இரண்டு அமைப்புகளையும் இணைந்து செயல்படவைக்க பி.பி.சி செய்தியாளர் வசந்த ராஜா முயற்சிகள் எடுத்தார். இதுபற்றி, 'ஸ்ரீலங்காவில் மார்க்சிய ஜே.வி.பி இயக்கத்துடனான எனது மோதல்கள்’ என்று விரிவாக எழுதினார். இதெல்லாம் நம் ஊர் காகிதப் புரட்சியாளர்களுக்குத் தெரியாது.

 மன்னை சித்து, மன்னார்குடி.

கழுகார் பதில்கள்!

'ஸ்டாலின் வசூலித்து கருணாநிதியிடம் தந்த ரூ.110 கோடியில் பாதியை எடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் செலவு செய்திருந்தால், தி.மு.க வெற்றி பெற்றிருக்குமே!’ என்று கட்சியின் சாமான்யத் தொண்டன் சொல்வதை தலைமை உணர்ந்து இருக்குமா?

அந்தத் தொகையை 'சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு என்று எடுத்து வைத்துவிட்டார்கள்’. அதுதான் பிரச்னையே! அந்தப் பணத்தை நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஸ்டாலின் சொன்னதாகவும், முன்னாள் அமைச்சர் ஒருவர்தான், வேண்டாம் என்று சொல்லியதாகவும் சொல்கிறார்கள். 'சட்டமன்றத் தேர்தல்தான் நமக்கு முக்கியம். அப்போது பணம் இல்லாமல் போய்விடும்’ என்று அந்த அமைச்சர் உஷாராகத்தான் சொல்லியிருக்கிறார். அதனால், பணம் கரையவில்லை... தொகுதிகள் கிடைக்கவில்லை!

 மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்!

நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பெண் எழுத்தாளர்கள் - ஆகியோர் கிளப்பிய விஷயங்கள், விமர்சனம் என்பதில் இருந்து சர்ச்சை என்று மாறிவிட்டதே?

தனக்கு நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள் என்ற பட்டியலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிட்டார். அது அவருடைய விருப்பம், உரிமை சார்ந்தது. அந்தப் பட்டியல் சரியானதா, மோசமானதா என்ற விமர்சனங்கள் வந்தன. அதுகூட ஆரோக்கியமானதே! ஆனால், நாஞ்சில் நாடன் சொன்னதில் ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள் என்று பிரித்து ஜெயமோகன் சொன்ன கருத்துத்தான், படைப்பியல் அறத்துக்குப் புறம்பானது. எழுத்தாளர்களில் ஆண், பெண் என்ற பகுப்புச் சுவரே இடிக்கத்தக்கது. இவ்வளவு எழுத்துப் பயணத்துக்குப் பிறகும், அது ஜெயமோகன் மனத்தில் பின்தொடர்ந்து நிழலாடுவது அபத்தம்.

 பஞ்சவண்ண மகன், கருப்பம்புலம்.

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படக் காரணம்?

பல் வலி, மூட்டு வலி!

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism