பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

ராகுல் காந்தியின் 44-வது வயதில் காங்கிரஸ் 44 தொகுதிகளைக் கைப்பற்றி இருப்பது பற்றி?

உங்கள் கணக்குப்படி 272 தொகுதிகளைக் கைப்பற்ற 228 ஆண்டுகள் ஆகும்போலத் தெரிகிறதே!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்!

சாதிக்கட்சித் தலைவர்கள் இன்னும் எந்த நம்பிக்கையில் கட்சி நடத்துகிறார்கள்?

சாதிகள் ஒழிந்துவிட்டதா என்ன? 'இன்னும்’ என்று எந்த நம்பிக்கையில் கேட்கிறீர்கள்? சாதிகள் இருக்கும் வரை அதை வைத்துக்கொண்டு லாபம் சம்பாதிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களைத் 'தலைவர்கள்’ என்று அடையாளப்படுத்துவதும் தவறு!

 இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.

கழுகார் பதில்கள்!

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடு என்ன?

காவிரிப் பிரச்னையில் வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகிய இரண்டு அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பு 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், இன்று வரை இந்த அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. 'இதுபோன்ற அமைப்புகளின் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானவை’ என்று உச்ச நீதிமன்றமே பலமுறை கூறியுள்ளது. எனவே இந்த அமைப்புகளை உருவாக்கவிடாமல் கர்நாடகம் தடுத்து வருகிறது. இதனை அமைக்காமல், 'காவிரி நீர் மேற்பார்வைக் குழு’ என்ற அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பை காங்கிரஸ் அரசு 2013 மே 24-ம் தேதி அமைத்தது. இதனைக் கலைத்துவிட்டு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகிய இரண்டையும் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக, கர்நாடகாவுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லும் மத்திய அமைச்சர்களின் வாயை அடைக்க வேண்டும்!

 பஞ்சவண்ண மகன், கருப்பம்புலம்.

கழுகார் பதில்கள்!

அதென்ன ஆட்டுக்குத் தாடி மேட்டர்?

'ஆட்டுக்குத் தாடியைப்போல ஆளுநர் பதவியும் அவசியம் அற்றது’ என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார். 'மாநிலங்களைக் கண்காணிக்க மத்திய அரசின் ஏஜென்ட்களாக மட்டுமே ஆளுநர்கள் இருக்கிறார்களே தவிர, அவர்களால் அந்த மாநிலத்துக்கு எந்தப் பயனும் இல்லை’ என்று அண்ணா கருதினார். ஆளுநர் பதவியே அவசியம் அற்றது என்று சொல்லி வந்தார். அப்போது சொன்ன உதாரணம்தான் இது. ஆட்டுக்குத் தாடி அவசியம் இல்லை என்ற பொருளில் சொல்லப்பட்டது அது.

'கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது அரசியல் சட்டம்’ என்று அண்ணா தனது கடைசி கடிதத்தில் எழுதினார். அந்த வாயிலின் வழியாக அனுப்பப்படுபவர்கள்தான் ஆளுநர்கள் என்று கருதினார்.

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

கடந்த 20 ஆண்டுகளாக எலியும் பூனையுமாக இருந்த லாலு பிரசாத்தும் நிதிஷ் குமாரும் இப்போது கைகோத்திருக்கிறார்களே... அதுபோல் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கைகோக்கும் காலம் வருமா?

கழுகார் பதில்கள்!

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இல்லாத வேறொரு கட்சியின் ஆட்சி தமிழகத்தில் வலிமையாக உட்காருமானால், இது சாத்தியம்தான்!

 அ.குணசேகரன், புவனகிரி.

கழுகார் பதில்கள்!

ஈராக் கலவரம் எப்போது முடிவுக்கு வரும்?

அமெரிக்கா அந்த நாட்டுப் பிரச்னையில் இருந்து முழுமையாக வெளியேறாத வரை முடிவுக்கு வராது.

 ஆற்காடு ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

கழுகார் பதில்கள்!

'ஒரு தொகுதியில் சாதியும், ஒரு தொகுதியில் மதமும் வெற்றி பெற்றுள்ளது’ என்று அ.தி.மு.க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சொல்லியிருப்பது பற்றி?

அப்படியானால் மற்ற 37 தொகுதியிலும் வாழும் மக்கள் மதச்சார்பற்றவர்களாக, சாதிப்பற்று அற்றவர்களாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமா?

 கோ.கிருஷ்ணமூர்த்தி, தஞ்சாவூர்-7.

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து சேர்த்தது தவறு என்று பார்க்க வேண்டுமே தவிர, அவருடைய முந்தைய சொத்துக்கள் பற்றிய விவரங்களைப் பட்டியல் போடுவதால் என்ன பலன்?

1991 முதல் 1996 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா என்பதுதான் வழக்கு. அதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துக்கள் இந்த வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பது சரியானதுதான்!

 கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

கழுகார் பதில்கள்!

எல்லாவற்றுக்கும் 'ஆமாம் சாமி’ போடாமல் மாற்றுக் கருத்து இருந்தால் பயம் கொள்ளாமல்

கழுகார் பதில்கள்!

தலைமையை எதிர்த்து நயமாக எடுத்துச் சொல்லும் தொண்டர்கள் அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, காங்கிரஸ், பி.ஜே.பி... இதில் எந்தக் கட்சியில் அதிகம் பேர் உள்ளனர்?

காங்கிரஸ் கட்சியில்தான்!

சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பலரும், 'டெல்லியின் செயல்பாடுகளால்தான் நாம் தோற்றோம்’ என்று பேசியிருக்கிறார்கள். இத்தகைய ஜனநாயகம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. இல்லவே இல்லை!

 எஸ்.தியாகராஜன், மதுரை-2.

கழுகார் பதில்கள்!

தயாளு கருணாநிதிக்கு வந்துள்ள 'அல்சைமர்’ நோய் எனக்கும் உள்ளதே?

இதுபற்றி சி.பி.ஐ-க்கு என்ன கவலை?

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு