அண்ணா ஹஜாரேவை ஒடுக்க எடுக்கும் தந்திர நடவடிக்கைகள் ஆள்வோருக்கு எதிராகவே அதிவேகமாகத் திரும்புகின்றன. உணர்வுகளை உள்ளத்தில் ஏந்தி குமுறிக்கொண்டு இருந்தவர்கள்கூட, இன்று வீதிக்கு வந்து நீதி கேட்டு நெருப்புக் குரல் கொடுக்கிறார்கள்.

அண்ணா கேட்கும் ஜன் லோக்பாலுக்கும் ஆளும் மன்மோகன் அரசு முன்வைக்கும் லோக்பாலுக்கும் இடையே இருப்பது, வைரக் கல்லுக்கும் உப்புக் கல்லுக்குமான வேறுபாடு. அப்புறம் எப்படி அணையும் ஆவேசம்?

''சத்தியாகிரகம் என்ற பெயரில் ஒரு தனி மனிதர் கொடுக்கும் நெருக்கடிக்குப் பயந்து, நாடாளுமன்ற உரிமைகளை விட்டுக்கொடுப்பது மிக ஆபத்தான முன் உதாரணம் ஆகிவிடும்'’ என்று பயம் காட்டுகிறார் பிரதமர். ''தட்டிக் கேட்கவே ஆள் இல்லாமல் தொடர்ந்து தவறு செய்யும் நோக்கில்தான் அண்ணா ஹஜாரேவின் ஷரத்துகளுக்கு ஆள்வோர் தலை சாய்க்க மறுக்கிறார்கள்'’ என்று திடமாக நம்புகிறார்கள் மக்கள். இடையில் எங்கேதான் இருக்கிறது தீர்வு?

லோக்பால் பற்றிய வாதங்கள் ஒரு பக்கம் தொடரட்டும். வெளிநாட்டு வங்கிகளில் குவிந்துகிடக்கும் இந்தியக் கறுப்புப் பணத்தைத் தாமதமின்றி மீட்டு, நம் நாட்டு கஜானாவில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மன்மோகன் அரசு எடுத்தால்தான் என்ன? மீட்கப்படும் அந்தக் கோடான கோடிகளைவைத்து இந்திய மக்களின் தலையெழுத்தையே ஒளிமயமாக மாற்றி அமைக்க முடியும் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றனவே? அதையாவது முதலில் செய்து காட்டினால், அண்ணா ஹஜாரே பின்னால் நிற்கும் அதே மக்கள், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொள்வார்களே!

'எங்கள் கட்சியினரும் கூட்டணிக்காரர்களும் குறுக்கு வழியில் சேர்த்த பணம் எதுவும் வெளிநாட்டு வங்கியில் இல்லை. நாங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள்' என்று நிரூபித்துக் காட்ட ஆளும் அரசுக்கு இதைவிட வேறு என்ன நல்வாய்ப்பு கிடைத்துவிட முடியும்?

ஒரே சிக்கல் - அதை எல்லாம் செய்வதற்கு இவர்கள் நிஜமாகவே உத்தமர்களாக இருக்க வேண்டுமே!