Published:Updated:

துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்

Vikatan Correspondent
துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்
துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்
துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெ.விடம் ஆதரவு கோருகிறார் ஜஸ்வந்த் சிங்

வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்,  முதல்வர் ஜெயலலிதாவை வருகிற 6-ம் தேதி சந்தித்து, தனக்கு ஆதரவு தருமாறு கோர உள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக,தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான  ஹமீத் அன்சாரியே அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்த்து,பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுகிறார். இவருக்குக் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவை பெற பா.ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.ஏ. சங்மாவுக்கு, பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தங்களது வேட்பாளருக்கு அந்த இரு கட்சிகளின் ஆதரவைப் பெற பா.ஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு ஆதரவு கோரி முதல்வர் ஜெயலலிதாவை ஆகஸ்ட் 6-ம் தேதி ஜஸ்வந்த் சிங் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

##~~##
இதுபற்றி பா.ஜனதா கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், ஜஸ்வந்த் சிங் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கோர உள்ளார். மேலும், எங்கள் கட்சித் தலைவர்களில் சிலர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவை பெறுவதிலும் மும்முரமாக உள்ளனர் என்றார்.
இதனிடையே ஜஸ்வந்த் சிங் தம்மை சந்திக்க வருவதையொட்டி ஜெயலலிதா வருகிற 6 ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கொடநாட்டிலிருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.